கீழக்கரை ஹமீதியா பள்ளியில் பழைமையை பறைசாற்றும் கண்காட்சி…

கீழக்கரையில் ஹமீதியா பள்ளி வளாகத்தில் இன்று (30-12-2017) கீழக்கரையின் பழைமையை பறைசாற்றும் விதமாக நம்முடைய முன்னோர்களின் கலாச்சாரத்தை மக்களுக்கு விளக்கும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கண்காட்சியில் கீழக்கரையின் பழைமையை விளங்கும் விதமாக பழங்கால வாழ்க்கை முறை, பயன்படுத்திய பொருட்கள், உணவு முறைகள் மற்றும் பல முன்னோர்களின் அடையாளங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த கண்காட்சியில் பள்ளி நிர்வாகிகளும், பள்ளி மாணவர்களும் கண்காட்சிக்கு வருகை தந்த பார்வையாளர்களுக்கு மிக அழகான விளக்கங்களை கொடுத்து தெளிவுபடுத்தினர்.

இதுபோன்ற கண்காட்சிகள் நடத்துவது மூலம் மாணவர்கள் கீழை நகரின் பாரம்பரியத்தை புரிந்து கொள்வதற்கும், வரக்கூடிய காலங்களில் கலாச்சாரத்தை பாதுகாக்கும் மனப்பான்மையையும் வளர்க்கும். இது போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தி கொடுத்த பள்ளி நிர்வாகம் நிச்சயமாக பாராட்டுதலுக்குரியவர்கள்.

புகைப்படத் தொகுப்பு 

புனித ரமலான் வாழ்த்துக்கள்..