எக்ககுடியில் இஸ்லாமிய பெண்கள் மதரஸா திறப்பு விழா…

இராமநாதபுரம் மாவட்டம் எக்ககுடி கிராமத்தில் இஸ்லாமிய பெண்கள் மதரஸா (நிஸ்வான்) திறப்பு விழா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் விழாவின் துவக்கமாக பள்ளி தலைமை இமாம் முஹம்மது ஜரீத் அன்வாரி கிராஅத் ஓதப்பட்டு, பின்னர் தலைசிறந்த மார்க்க உலமாக்களான தேவிப்பட்டினம் தாருல் உலூம் ஹக்கானியா பள்ளி முதல்வர் முஹம்மது காசிம் அன்வாரி, நிஸ்வான் துறை குழுவின் மேலாளர் ஹக்கீம் சுல்தான் காஷ்பி, இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் முஹம்மது ஜலாலுதீன் அன்வாரி, இராமநாதபுரம் மாவட்ட நிஸ்வான் துறை ஆய்வாளர் ஹஜ்ஜி முஹம்மது ரஷாதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இவ்விழாவிற்கு ஹாஜா நஜ்முதீன் தலைமையும் ஜமாஅத் பொருளாளர் குலாம் முஹம்மது முன்னிலையும் வகித்தனர்.

மேலும் மதரஸா நிர்வாக குழு உறுப்பினர்கள் ஹாஜி நூர் முஹம்மது, ஹாஜி நெய்னா முஹம்மது, ஹாஜி ஹபீப் முஹம்மது மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ஹாஜி இஸ்ஸதீன், ஹாஜி அப்துல் வாஹித், அப்துல் ரஹீம் ஜகுபர் சாதிக் மற்றும் சமூக ஆர்வலரும் முஸ்லிம் ஜமாஅத் முக்கிய நிர்வாகியுமான முஹம்மது சிராஜுதீன் மற்றும் ஏராளமான ஊர் பெரியோர்கள், தாய்மார்கள், வாலிப தோழர்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்த அனைவரையும் ஜமாஅத் காரியத்தரசி அஸ்கர் அலி வரவேற்றார். இறுதியாக பள்ளி துணை இமாம் முஹம்மது ரியாஸ் துஆ ஓதப்பட்டு விழா நிறைவு பெற்றது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..