இந்திய ஜனாதிபதி நாளை தமிழகம் வருகை – பலத்த பாதுகாப்பு …

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை (23-12-2017) தமிழகம் வருகை தர உள்ளார். நாளை காலை 11.00 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மண்டபம் சென்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சமாதியில் அஞ்சிலி செலுத்துகிறார்.

பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்னை சென்று சென்னையில் நடைபெற உள்ள இந்திய பொறியியல் மாநாட்டில் நடைபெற உள்ள 32வது பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார். மேலும் அதை தொடர்ந்து அடுத்த நாள் நடக்கவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து ஆந்திரா செல்கிறார்.

ஜனாதிபதியின் வருகையை ஒட்டி சென்னை, மதுரை, இராமநாதபுரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.