குஐராத் தேர்தல் ராகுலின் வெற்றியும், மோடியின் தோல்வியும்..

குஜராத் தேர்தல் முடிவுகள் எதிர்ப்பார்த்த வகையில் அமையவில்லை என்று பாஜகவின் தலைவர்கள் கருதினாலும், ஆளுங்கட்சி மீது மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் இருந்த நிலையில் அதையும் தாண்டி மயிரிழையில் ஆட்சியை தக்கவைத்துள்ளது என்பதுதான் நிதர்சன உண்மை.  அதற்கு சிறிய உதாரணம் 16 தொகுதிகளில் 200 முதல் 2000 ஓட்டு வித்தியாசத்தில் இடத்தை தக்க வைத்துக் கொண்டது, மோடியின் சொந்த தொகுதியில் 20 ஆயிரம் ஓட்டுக்களில் தோற்றது என்று பலவற்றை அடுக்கலாம்.
பா.ஜ.கவின் கோட்டையாக “குஜராத் மாடல்” என்ற மாயையை உடைத்து கடந்த காலங்களோடு ஒப்பிடும் பொழுது பா.ஜ.க பெரும் அளவில் ஓட்டு வங்கியை இழந்துள்ளது, அதே சமயம் காங்கிரஸ் பா.ஜ.கவுக்கு நெருக்கமான சதவீதத்தில் வாக்குகளை பெற்றிருப்பது மோடியின் அரசுக்கு பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
அதேபோல் வருகின்ற  2019 பாரளுமன்ற தேர்தலில் பாஸிச அரசை எதிர்கொள்ள தயாராக இருக்கும் அனைத்து மதசார்ப்பற்ற கட்சிகளுக்கும் பல முன்னுதாரணங்களை தந்துள்ளது என்பதை சுயேட்சை வேட்பாளரான ஜிக்னேஷ் மேவானி வெற்றி மூலம் அறிய முடிகிறது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் வட்கம் பகுதியில் அதிக செல்வாக்கு நிறைந்தவர் ஜிக்னேஷ் மேவானி, அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  காங்கிரஸ் தவிர ஆம்ஆத்மி போன்ற கட்சிகளின் ஆதரவுடன்  அவர் 20,000 க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பண மதிப்பு நீக்கம்,ஜி.எஸ்.டி போன்ற கடுமையான சட்டங்களால் கிராமம் மற்றும் நகர் புறத்தில் வாழும் சாமானிய மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியும்,எதிர்ப்புகளும் எழுந்துள்ள நிலையில் அதையும் மீறி பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆனால் மிண்ணனு இயந்திரத்தில் செய்த முறைகேடுகளே இந்த வெற்றிக்கு காரணம் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். குஜராத் தேர்தலில் பா.ஜ.க வின் பிண்டைவாக  முக்கிய கீழ்கண்ட மூன்று காரணங்களை பிரபல  பத்திரிக்கையாளர்கள் முன் வைக்கின்றனர்.

1. சௌராஸ்ட்ரா ஓட்டுக்களை இழந்தது.

2. குறைவான பெண்கள் ஓட்டுக்கள் பதிவானது.

3. காங்கிரஸ் கூட்டணி.

இது குறித்து வெற்றிப் பெற்ற சுயேட்சை வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி கூறுகையில்: வீதிகளில் நாம் எழுப்பும் நீதிக்கான குரல் எந்த அளவுக்கு பலமாக ஒலிக்கிறது என்பது மட்டும் முக்கியமல்ல. ஆனால் சட்டசபையிலும் அந்தக் குரல் ஒலிக்க வேண்டும். நான் குரல் அற்றவர்களின் குரலாக இருப்பேன் என்றும், 2019 ல் நடக்கயிருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் இந்த முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், முதல் முறையாக பாஜக சரிவை சந்தித்த நிலையில் இரண்டு இலக்கத்தை எட்டியுள்ளது என்று சிந்தனையை தூண்டக்கூடிய கருத்தையும் பதிந்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் “ ஏன் தலித் என்ற அடையாளத்தை எனக்கு கொடுத்துள்ளனர் என்று தெரியவில்லை”. ஜாதி,மதம் பேதமின்றி ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் நான் போராடி வருகிறேன். ஜாதிகள் அடிப்படையில் மக்களை ஒருங்கிணைப்பது நம்மை மேலும் அந்நியப்படுத்துகிறது. ஆகையால் பாசிஸ்டுகளை எதிர் கொள்ள நாடு முழுவதும் ஜாதி, மதம் பாராமால் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்” என்றார்.
மேலும் இச்சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற ஜே.என்.யூ மாணவர் அமைப்பு மற்றும் SIO போன்ற பிற மாணவ அமைப்புகள், SDPI மற்றும் இடதுசாரி கட்சிகளின் பிரச்சாரமும் சுயேட்சை வேட்பாளரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.  ஆனால் சமுதாயத்திற்காக போராடும் அமைப்பு என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் அமைப்புகள், இந்த வெற்றியின் மூலம் பாடம் கற்க வேண்டும்.  தமிழகத்தில் தீயசக்திகளை கூண்டோடு அழிக்க வேண்டுமாயின் அனைத்து அமைப்புகளும் தனித்தன்மை என்ற மாயை வலையில் இருந்து வெளியேறி, சமுதாய நலன் மட்டுமே குறிக்கோளாக, பாசிசத்தை ஒழிப்பது என்ற குறிக்கோளுடன் ஒன்றிணைந்தால் மட்டுமே முடியும், அதைத் தவிர்த்து தான் என்ற பிடிவாதம் கொண்டு பிரிந்து நின்றால் என்றுமே தாழ்ந்த நிலையில்தான் இருக்க வேண்டும்.
வரும் 2019 பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அமைப்புகள் முடிவெடுக்காவிட்டால், இனி எப்பொழுதுமே முடிவெடுக்க வாய்ப்பு கிடைக்காது என்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

Comments are closed.