வீணாகும் கீழக்கரை மக்கள் வரிப்பணம் …

கீழக்கரை நகராட்சிக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக வறட்சி நிதியாக பல லட்சங்கள் வந்தது. அந்த நிதியில் அமைச்சர் மணிகண்டன் உத்தரவின் பேரில் கீழக்கரையில் உள்ள 11 வார்டுகளுக்கு அமைச்சர் பெயர் பொருத்திய கல் வெட்டுடன் ஆழ்கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் டேங்கும், பம்புகளும் பொறுத்தப்பட்டது.

தமிழக அமைச்சர் தன் பெயர் பொறித்த காரணத்தால் சில இடங்களில், கிழக்கு நாடார் தெரு உட்பட ஆறு இடங்களில் அதிரடியாக தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் உபயோகத்திற்கு அர்பணிக்கப்பட்டது.  ஆனால் சின்னக்கடை தெரு, சொக்கநாதர் கோவில், கிழக்குத் தெரு உட்பட 5 இடங்களில் தண்ணீர் வருவதேயில்லை, நகராட்சியும் கவனம் செலுத்தவும் இல்லை.

ஆனால் சில இடங்களில் 40 அடியில் தண்ணீர் வரவில்லை என்று மக்கள் டீம் அமைப்பு சார்பாக புகார் அளித்த பின்பு 50 அடியாக துளை அதிகப்படுத்தப் பட்டது, ஆனால் மோட்டார் வேலை செய்யவில்லை, அதை சரி செய்யவும் நகராட்சி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் நீண்ட காலம் உழைக்கும் வகையில் உறுதியான சிமெண்ட் தொட்டியாக அமைத்துள்ளார்கள். ஆனால் நம் ஊரிலே மக்கள் நலனை விட தன் பெயர் விளங்க வேண்டும் என்ற அவசர கதியில் திட்டங்களை நிறைவேற்றியிருந்தால், திட்டத்தின் பலனை மக்கள் அடைய முடியாத அவல நிலை.

மக்களின் புலம்பல் மணியான மந்திரிக்கு மணியாக ஒலித்தால் நிச்சயமாக மக்களின் கூக்குரலுக்கு விடிவு காலம் கிடைக்கும்.

செய்தி உதவி:- மக்கள் டீம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

Comments are closed.