கீழக்கரை வடக்குத் தெரு பகுதியில் அபாயகரமாக தொங்கும் மின்கம்பிகள்.. கண்டு கொள்ளாத மின்சார வாரியம்…

கீழக்கரை வடக்குத் தெரு 20வது வார்டு பகுதியில் பல வருடங்களாக குழந்தைகள் கைக்கும் எட்டும் வகையில் மின்சார வயர்கள் தொங்கிய நிலையில் உள்ளது.  மேலும் அங்குள்ள வாய்கால் மூடிகளும் உயர்த்தி வைக்கப்பட்டுள்ளதால் நடந்து செல்பவர்களின் தலையில் உரசும் நிலையிலேயே உள்ளது. இது சம்பந்தமாக பல முறை மின்சார வாரிய ஊழியர்களிடம் காண்பித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இது சம்பந்தமாக இத்தெரு மக்கள் அம்மா அழைப்பு மையத்திலும் புகார் மனு அளித்துள்ளனர்.  மேலும் இந்த 20 வார்டு பகுதியிலேயே கடந்த வருடங்களில் மின்சாரம் தாக்கி இரண்டு உயிர் பலியாகியுள்ளது.  இதற்கு தீர்வு பெரிய உயிர் சேதம் ஆகும் முன்பு மின்சார வாரியம் எடுக்குமா??

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..