இராமநாதபுர மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் கடத்திய மூவர் கைது..

இராமநாதபுர மாவட்டத்தில் நேற்று (11-12-2017 ) திருவாடானை, உச்சிபுளி மற்றும் எமனேஸ்வரம் ஆகிய இடங்களில் எவ்வித அரசு அனுமதியுமின்றி சட்ட விரோதமாக மணல் திருடிய மூவர் கைது செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன்.

அம்மூவர் 1) மணிகண்டன், த/பெ ஜீவானந்தம், C. K. மங்களம், 2) ஜெயமுருகன், த/பெ சந்திரன், ராம்நகர், பாம்புவிழுந்தான், எமனேஸ்வரம், 3) கணேசன், த/பெ முனியாண்டி, மங்கள குடியான் வலசை ஆகியோர் ஆவார்கள்.

மேலும் அவர்கள் மணல் கடத்த பயன்படுத்திய 2 டிப்பர் லாரிகளும் (Reg.No: TN 50 H 0759, TN 48 AF 7099) ஒரு ட்ராக்டரும் ( Reg.No: TN 65 AC 8430) கைப்பற்றப்பட்டு அந்ததந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடந்து வருகிறது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image