Home செய்திகள் Financial Resolution and Deposit Insurance Bill – FRDI 2017 மத்திய அரசு பொதுமக்கள் மீது அடுத்த தாக்குதலுக்கு தயார் ஆகிறதா??

Financial Resolution and Deposit Insurance Bill – FRDI 2017 மத்திய அரசு பொதுமக்கள் மீது அடுத்த தாக்குதலுக்கு தயார் ஆகிறதா??

by ஆசிரியர்

கடந்த ஆண்டு பணமதிப்பிழப்பு திட்டம் ஆரம்பித்து தினம் தினம் ஒரு அதிர்ச்சியை தந்த வண்ணமே  உள்ளது தற்போதைய மத்திய அரசு.  இந்த வருடம் (2017) நிம்மதியாக கடக்கப் போகிறது என்று பெருமூச்சு விட எத்தனிக்கும் வேலையில் “வங்கிகள் தீர்மானம் மற்றும் முதலீடு காப்பீடு – FRDI 2017 என்ற புதிய சட்டம் சத்தமில்லாமல் தாக்குதல் நடத்த தயாராகிக் கொண்டிருக்கிறது.  அது என்ன Financial Resolution and Deposit Insurance Bill  – FRDI 2017?.  அது ஒண்ணுமில்லைங்க உங்கள் பணம் இனி உங்களுடையது இல்லை என்பதை சட்டபூர்வமாக சொல்வதுதான்.

இச்சட்டத்தின் மூலம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேலாக உங்களுடைய வங்கி சாதாரண அல்லது நிரந்தரம் அல்லது வைப்புத் தொகை அல்லது எவ்வகையான கணக்கில் வைத்திருப்பவர்களின் பணத்தையும் திவாலாகப் போகும் வங்கிகளை அப்பணத்தை வைத்து மீட்பு நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் திட்டம்தான்.  பயந்து விட வேண்டாம்,  அதற்காக அந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடன் பத்திரமாகவோ அல்லது பங்கு பத்திரமாகவோ வழங்கி விடும்.  ஆனால் எல்லோர் மனதிலும் எழும் கேள்வி அப்படியென்றால் தேவைக்கு பணத்தை உடனே வங்கியில் இருந்து எடுக்க முடியுமா?? என்பதுதான்.  அதற்கான தெளிவான விடை மத்திய அரசிடம் இருந்து இதுவரை கிடைக்கவில்லை.  இந்த சட்டம் 10ம் ஆகஸ்ட் 2017 அன்று பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.  தற்சமயம் பாராளுமன்ற குழுவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்பது கூடுதல் விபரம்.

மேலும் சமீபத்திய மத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விபரப்படி 88.4 சதவீத்தினர் 5 கோடிக்கு மேல் கடன் பெற்றவர்கள் என்றும் அடுத்தாக மொத்த கடன் தொகையில் 25 சதவீத கடனை மொத்தம் 25 நபர்களே பெற்றுள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் தருகிறது.  இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தை சுரண்டுபவர்கள் கார்பரேட் முதலைகள்தான் என்பது தெளிவாகிறது.

அடுத்ததாக பொது வங்கிகளை தனியார் மயமாக்கும் விதமாக இச்சட்டத்தின் மூலம் வங்கியில் பணிபுரிவர்களை எந்த கேள்வி கணக்கும் கேட்காமல் வேலையில் இருந்து நீக்க முடியும்,  திவாலான வங்கியை வேறு வங்கியுடன் எந்த அறிவிப்பும் இன்றி இணைக்க முடியும்,  வங்கிகளின் பங்குகளை பொது சந்தையில் விற்க முடியும் என்ற சாத்தியமும் உண்டு.  இதன் மூலம் அனைத்து அரசுடமை வங்கிகளை தனியார் மயமாக்குவதில் அரசு குறியாக இருக்கிறது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

இது சம்பந்தமாக மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்த புதிய சட்டம் மக்களுக்கு பாதகமானது அல்ல, நிச்சயமாக இது சாதகமானதுதான்.  மேலும் தற்போதைய சட்டதிட்டப் படி வாடிக்கையாளர்களின் சேமிப்பு தொகையில் முதல் 1 லட்சம் ரூபாய் மட்டுமே காப்பீடு செய்யப்படுகிறது,  ஆனால் இந்த புதிய திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கியில் உள்ள மொத்த தொகையும் காப்பீடு செய்யப்படுகிறது.  வங்கிகள் திவாலாகும் சூழ்நிலை ஏற்பட்டாலும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் முதலில் வாடிக்கையாளர்களுக்கே இழப்பீடு தொகையை வழங்க உத்தரவு பிறப்பிக்கும் வகையில் இச்சட்டம் வழி வகுக்கிறது என்று விளக்கியுள்ளார்கள்.

ஆனால் வங்கியை நம்பி பணத்தை போட்டவர்களின் தொகையை அவர்களின் ஒப்புதல் இல்லாமலே பிற தேவைகளுக்கு முதலீடு செய்வது அடிப்படைச் சட்டத்தின் விதிமீறல் அல்லவா?? அதே போல் வாடிக்கையாளர்கன் பணத்தை தேவைப்படும் பொழுது கணக்கில் இருந்து எடுக்க முடியுமா? என்பது விடை கிடைக்காத கேள்வியாகவே இருக்கிறது.  அடுத்த “புதிய இந்தியா” “டிஜிட்டல் இந்தியா” பிறக்கப் போகிறது மக்களே தயாராகுங்கள் வரவேற்க…

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!