போக்குவரத்து கழகத்தால் புறக்கணிக்கப்படும் கீழக்கரை..

கீழை நகரம் தாலுகா என்ற அந்தஸ்தை பெற்றாலும் அதற்கான அடிப்படை வசதிகள் என்பது கேள்வி குறியாகவே உள்ளது. கீழக்கரையில் பேருந்து நிலையம் என்று ஒன்று இருந்தாலும், அங்கு ஒரு நிர்வாக அலுவலகரோ, நேர கண்காணிப்பாளரோ யாரும் கிடையாது. போக்குவரத்தின் கால அட்டவனை கூட சரி வர பராமரிக்கப்படுவது கிடையாது.

அதற்கும் மேல் கீழக்கரை வழி என்ற அறிவிப்பு பலகையுடன் வரும் பேருந்துகள் கூட ஊருக்குள் உள்ள பேருந்து நிலையத்திற்கு வருவது கிடையாது. அது சம்பந்தமாக பேருந்தின் ஓட்டுனரிடமோ அல்லது நடத்துனரிடமோ விசாரித்தால் எந்த விபரமும் கூறுவதில்லை. அதையும் மீறி கீழக்கரைக்கு ஏறும் பயணிகள் கீழக்கரை முக்கு ரோட்டிலேயே இறக்கி விடும் அவலம்தான் தொடர்கிறது. போக்குவரத்து அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண்பார்களா??

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

Comments are closed.