மாநில அளவிலான ‘தேக்வாண்டோ’ (TAEKWONDO) போட்டியில் கீழக்கரை கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை…

தமிழ்நாடு மாநில அளவிலான சப்-ஜூனியர் & ஜூனியர் ‘தேக்வாண்டோ’ (TAEKWONDO) சாம்பியன் போட்டி தமிழ்நாடு மாநில தேக்வாண்டோ அசோஸியேஷன் சார்பில், புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர் தேக்வாண்டோ அசோஸியேஷன் மூலம் புதுக்கோட்டை ஜே.ஜே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிசம்பர் 2-3 ஆகிய இரு நாட்களாக நடந்தது.

அப்போட்டியில் கலந்துகொண்ட கீழக்கரை கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்களான ஜெயகார்த்திக் (6ஆம் வகுப்பு), செய்யது மஃப்ரூக் சாகிபு (6ஆம் வகுப்பு) மற்றும் அகமது அல்ஹாஸிர் (4ஆம் வகுப்பு) ஆகியோர் முறையே 39, 29 மற்றும் 18 கிலோவுக்கு கீழுள்ள பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

வெற்றிபெற்ற மாணவர்களையும், போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களையும் பள்ளி முதல்வர் இராஜேஷ் குமார் கிருஷ்ணன், பள்ளி மேலாளர் அபுல் ஹசன், தற்காப்புக் கலை ஆசிரியர் திலக் பகதூர் கடல் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர்.

1 Comment

Comments are closed.