சித்த வைத்தியசாலை பெயரில் போலி வைத்தியர் நடமாட்டம்… இராமநாதபுர மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்குமா??

ஏமாற்றுவதில் பல வகை. அதிலும் மக்களின் ஆசையையும், ஏக்கத்தையும் சாதகமாக்கி ஏமாற்றும் இரக்கமில்லா கூட்டம் பெருகி கொண்டே வருகிறது. உதாரணமாக ஆண்மை குறைவு, பெண்கள் பிரச்சனை என்று கிராம மக்களை குறிவைக்கும் போலி மருத்துவர்கள் சமீபத்தில் அதிகமாகி வருகிறது.

சமீபத்தில் குழந்தையின்மை, ஆண்மை குறைவு, பெண்கள் பிரச்சனைபோன்ற பல்வேறு பிரச்சனைகளை சரி செய்வதாக கூறி திருவண்ணாமலை டாக்டர் என்று இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களில் அறிமுகம் செய்து குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தையில்லா தம்பதியினரிடம் உங்கள் பிரச்சனைகளை ௭ளிய முறையில் சரிசெய்யலாம் ௭ன்று கூறி பல்வேறு கிராம மக்களிடம் பல்லாயிரம் ரூபாய்களை ஒரு கும்பல் கறந்துள்ளனர். இது பற்றி இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பாரதிநகரை சேர்ந்த ஒரு பெண், தன் அண்ணன் மணைவிக்கு நீண்ட நாட்களாக குழந்தையில்லை, ஆகையால் என்னுடைய அம்மா டாக்டர் என்று ஒருவரை அறிமுகப்படுத்து வந்தவரிடம் 18,000 ரூபாய் மூன்று மாதங்களுக்கு முன்பாக கொடுத்தார், சம்பந்தப்பட்டவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு ௨ங்களுக்கு மருந்துகள் அனுப்புகிறோம் என்று கூறி சென்றவர்கள், கடந்த மூன்று மாதங்களாகியும் இதுவரை அனுப்பவில்லை, அதுபோல் எப்பொழுது போணில் தொடர்பு கொண்டாலும் வெளியூரிலும், வெளிநாட்டிலும் இருப்பதாகவே பதில் வருகிறது, ஆனால் அவர்களின் இருப்பிடத்தையும் கண்டறிய முடியவில்லை, கொடுத்த பணமும் கிடைக்கவில்லை” என்றார்.

இது போன்ற பொதுமக்கள் ஏமாறுவதற்கு முக்கிய காரணம் அவர்களின் அறியாமையும், அவசரமும், யாரையும் எளிதில் நம்புவது. இது போன்ற நபர்களை காணும் பொழுது பொதுமக்கள் தீர விசாரித்து காவல் துறையில் தெரிவித்தால் மட்டுமே இது போன்ற போலிகளை அடையாளம் காண முடியும்.