துபாயில் இந்திய கல்வி கண்காட்சி ..

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதி தேரா பகுதியில் அமைந்துள்ள க்ரௌன் ப்ளாசா ஹோட்டல் வளாகத்தில் இந்திய கல்வி கண்காட்சி (Indian Education Fair) நடைபெறுகிறது.

இக்கண்காட்சியை இந்தியன் எக்ஸ்பிரஸ் ( The Indian Express Group) ஏற்பாடு செய்துள்ளது.  இக்கண்காட்சி காலை 09.00 மணி முதல் மாலை 07.00 வரை நடைபெற உள்ளது.

மேலும் இக்கண்காட்சியில் தமிழகம், கேரளா, உத்தர்காண்ட், டில்லி, ஒரிசா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம், கர்நாடகா, தெலுங்கானா ஆகிய இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து பல முன்னனி கல்வி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

இந்தகண்காட்சி கல்லூரி படிப்பை தொடங்க இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒரே இடத்தில் அனைத்து கல்லூரிகளின் விபரம் மற்றும் அவர்கள் வழங்கும் பாடத்திட்டங்களை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.