கீழக்கரையில் மக்கள் நலப்பணி செய்ய புதியதோர் அமைப்பு “சாலை தெரு வெல்ஃபேர் அசோசியேசன்”…

கீழக்கரை நகர் வந்தாரை வாழ வைக்கும், எளியோரை உயர வைக்கும் நல்லுல்லங்களை உள்ளடக்கிய ஊர். செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி என்ற மாமனிதரை உலகுக்கு வழங்கிய பெருமையும் கீழை நகருக்கு உண்டு. கீழக்கரையில் நன்மையை கொள்ளையடிப்பதில் பல அமைப்புகள் முந்திக்கொண்டாலும், இன்னும் பல நன்மைகளை மக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் கீழக்கரை சாலை தெருவில் “சாலை தெரு வெல்பர் அசோசியசன் ” என்ற பெயரில் புதிதாய் உதயமாக உள்ளது.

இந்த அமைப்பு 87 உறுப்பினர்களை கொண்டு சிறிய அளவில் தொடங்கும் நோக்கத்துடன் முதல் ஆலோசனைக் கூட்டம் நேற்று (03-12-2017) சாலை தெரு ஓடக்காரப் பள்ளியில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது, வழிநடத்துதல் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுது.

மேலும் இந்த அமைப்பு மூலம் கணவரை இழந்த விதவை பெண்மணிகளுக்கு ₹ 450/- மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்குவது என தீர்மானித்து தொடக்கமாக 5 பேருக்கு கொடுக்கப்பட்டது. மேலும் வஃபாத்தானவர்களுக்கான காரியங்கள் செய்வதற்கான பொருட்கள் அனைத்தும் இலவசமாய் வழங்குதல் , சேர் வாங்குதல், மருத்துவ உதவிகள் , கல்வி உதவிகள், வாரம் ஒருமுறை தெருக்களை சுத்தம் செய்தல் உட்பட பல்வேறு நலத்திட்டத்தை செயல் வடிவம் தர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வமைப்பு வெற்றி அமைப்பாக உருவெடுத்தது மக்களுக்கு நல்ல பல பணிகள் புரிய கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.