கீழக்கரையில் இலவச பொது மருத்துவ முகாம்..

கீழக்கரையில் இன்று (03-12-2017) ஐக்கிய நல கூட்டமைப்பு மற்றும் தெற்கு தெரு ஜமாத் மஸ்ஜித் பரிபாலன கமிட்டி இணைந்து புதுத்தெரு, நூராணியா பள்ளி வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாம் ஏற்பாடு செய்திருந்தனர்.

இம்மருத்துவ முகாமை தெற்கு தெரு ஜமாஅத் தலைவர்.உமர் களஞ்சியம் துவங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது ஜமாத் நிர்வாக உறுப்பினர்கள் பவசுல் அமீன், செய்யது இபுராஹிம், லாஹிதுகான் மற்றும் பலர் உடனிருந்தனர்.

இம்மருத்துவ முகாம் சென்னை அப்போலோ மருத்துவமனை மருத்துவர்.முகம்மது கரீம் பாஷா தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் அடிப்படை பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.

இம்முகாமின் ஏற்பாடுகளை முஸ்லிம் பொதுநல சங்கம், இஸ்லாமிய சமதர்ம சங்கம், முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் ஆகிய அமைப்பு உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.