கீழக்கரை மக்களுக்கான சேவையில் கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனை..

கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கி வரும் கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனை மக்களுக்கு தொடர் சேவை செய்யும் பொருட்டு பச்சிளங்குழந்தைகள் மருத்துவர் மற்றும் பெண்களுக்காக பிரத்யேக பெண் பொது நல மருத்துவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இம்மருத்துவர்கள் தினமும் காலை முதல் மாலை முதல் நோயாளிகளுக்கு மருத்துவம் வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் இன்றைய நவீன உலகத்தில் சிறியவர்கள் முதல் வயதுக்கு வந்த பெண்கள் வரை எந்ந ஒரு விசேஷமாக இருந்தாலும் அலங்காரம் செய்து கொள்ளவே விரும்புகிறார்கள். அனைவருடைய எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வண்ணம் குறைந்த கட்டணத்தில் இயற்கையான முறையில் மருத்துவர்களின் மேற்பார்வையுடன் அனைத்து வகையான பெண்கள் தேவைகளையும் நிவர்த்தி செய்யும் வண்ணம் பெண்கள் அழகு நிலையமும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இம்மருத்துவமனையில் கூடிய விரைவில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய பல் மருத்துவ பிரிவும் தொடங்க உள்ளார்கள். அதுபோல் இம்மருத்துவமனையில் அனைத்து வகையான உடல் பரிசோதனைகளும் நவீன உபகரணங்கள் உதவியுடன் குறைந்த கட்டணத்தில் செய்கிறார்கள் என்பதும் முக்கியமான அம்சமாகும்.