Home செய்திகள்உலக செய்திகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கூடுதல் மதிப்பு வரி அமலாக இருப்பதால் கட்டுமானப் பணிகள் தீவிரம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கூடுதல் மதிப்பு வரி அமலாக இருப்பதால் கட்டுமானப் பணிகள் தீவிரம்.

by Mohamed

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜனவரி 1 2018 முதல் 5%  கூடுதல் மதிப்பு வரி (Value Added Tax) அஅமலாக்கம் பட உள்ளது.  இதனால் கட்டுமான துறையில் உள்ளவர்கள் தங்கள் பணிகளை இந்த மாத இறுதிக்குள் 5% சத வீத வரிப்பணத்தை மிச்சப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த மாத இறுதிக்குள் பணிகளை முடித்து, அதற்கான  சரக்கு மற்றும் சேவை விபரப் பட்டியலை (Invoice)  வாடிக்கையாளருக்கு அனுப்புவதன் மூலம் கூடுதல் மதிப்பு வரியில் (Value Added Tax) இருந்து இந்த வருட வியாபத்திற்கான வரவில் 5% வரியை காத்து கொள்ள முடியும். ஆகையால் கட்டிட உரிமையாளர்கள மற்றும் ஒப்பந்தங்காரர்கள் விரைவாக பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

சில நிறுவனங்கள் பிற்கால தேவையை பூர்த்தி  பொருட்டு தேவையான பொருட்களை இப்பொழுதே கொள்முதல் செய்யும் பணியையும், ரொக்க பணமாக செலுத்தி பெறவும் ஆயத்தமாகியுள்ளார்கள். இச்சூழ்நிலையிலும் ,கட்டிட பொருட்களின் விலையில் எந்த உயர்வும் காணப்படாததால் கட்டுமான தொழில் வட்டார மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஅதே சமயம் ஒப்பந்தங்கள் கடந்த வருடங்களாக இருந்தும், பணிகள் 2018ம் ஆண்டு முடிக்கும் பட்சத்தில், அதற்கான வரியை கட்ட வேண்டியது அவசியமாகிறது, அதன் காரணமாகவே இவ்வருடத்திற்குள் ஓப்பந்த பணிகளை முடிக்க  முயல்கினலறனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அனைத்து துறையைச் சார்ந்த நிறுவனங்களும் கூடுதல் மதிப்பு வரியை நடைமுறைப்படுத்துவதற்கு போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள். முதல் கட்டமாக ஆன்லைன் மூலம் இணையத்தளத்தில் நிறுவனத்தைப் பற்றிய முழுமையான தகவல்களை பதிவேற்றம் செய்து வேட் (VAT) பதிவு எண்ணை பெறுவது அவசியமான ஒன்றாகும்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!