Home செய்திகள் ஐக்கிய அரபு அமீரகம் ராசல்கைமாவில் உருவாகி வரும் வளர்ப்பு பிராணி நாய் பூங்கா…அமீரகத்தின் முதல் பூங்கா..

ஐக்கிய அரபு அமீரகம் ராசல்கைமாவில் உருவாகி வரும் வளர்ப்பு பிராணி நாய் பூங்கா…அமீரகத்தின் முதல் பூங்கா..

by ஆசிரியர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராசல்கைமா பகுதியில் 7000 சதுர அடி அளவில் வளர்ப்பு பிராயணியான நாயை பராமரிப்பதற்காகவே பிரத்யேகமாக உருவாகி வருகிறது.  இப்பூங்கா வரும் பிப்ரவரி மாதம் திறக்கப்பட உள்ளது.  இப்பூங்கா ராசல்கைமா அல்ஜசீரா அல்ஹம்ரா பகுதியில் ராசல்மைகா பிராணிகள் மேம்பாட்டு மையம் (RAK ANIMAL WELFARE CENTRE  ) சார்பாக அமைக்கப்பட்டு வருகிறது.  இப்பூங்கா அரசாங்கத்தால் வளர்ப்பு பிராணிகளுக்காக அமைக்கப்படும் முதல் பூங்காவாகும்.

இப்பூங்காவில் பெரிய ரக வளர்ப்பு பிராணி மற்றம் சிறிய வகைகள் என தனியாக வசதிகளுகம் அமைக்கப்பட்டுள்ளன.  இந்தப் பூங்காவில் நாய்கள் விளையாடுவதற்கென பிரத்யேக குளியல் தொட்டி, வளர்ப்பு பிராணிகளுக்கான பொருட்கள் பிரத்யேக விற்பனை நிலையம்,  நாய்கள் தங்குவதற்கான வசதிகள்,  தெரு ஓரம் கவனிக்கப்படாமல் விடப்பட்ட நாய்களை பராமரிக்க தனி இடம் என்ற பல உயர்தர வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  ஆனால் இந்த வசதிகளை உபயோகப்படுத்த செலத்த வேண்டிய கட்டண தொகை இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

ஆனால் 2015ம் ஆண்டு முதலே துபாயில் நட்சத்திர ஹோட்டல் ரீதியிலான வசதியுடன் தனியார் நபர்களால் நாய்களுக்கென பிரத்யேக ஆலு ( MY SECOND HOME – LUXURY PET RESORT & SPA)என்ற பெயரில் விடுதி செயல்படுவது குறிப்பிடதக்கது.  இது இந்தியாவைச் சார்ந்த மூன்று நபர்களால் ஆரம்பிக்கபட்டதாகும்.  இங்கு வளர்ப்பு பிராணிகளை பதிவு செய்ய திர்ஹம் 500ல் ஆரம்பம் செய்து தங்குவதற்கான செலவு 500 மற்றும் நாய்களை பயிற்சி செய்வதற்கான தொகை 2800 திர்ஹம் வரை செல்கிறது.

இங்கு நாய்கள் தங்குவதற்கான  Standard Suite, Deluxe Suite, Presidential Suite, Royal Suite, Little Gems Suite மற்றும் Family suite என்ற பெயரில் அறைகள் அமைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!