பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பாக கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கடந்த 5 ஆண்டுகளாக கல்லூரி மாணவ / மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இது பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பெற்றோர்களுக்கு உதவியாகவும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கமாகவும் அமைந்துள்ளது.

கடந்த 2010-ம் வருடம் சுமார் 3 இலட்சம் மதிப்பில் துவங்கப்பட்ட உதவி தொகை 2014-2015 ம் கல்வி ஆண்டில் 15 இலட்சமாகவும், 2015-2016 கல்வி ஆண்டில் 17 இலட்சமாகவும், 2016-2017 கல்வி ஆண்டில் 17 இலட்சமாகவும் உயர்த்தி கொடுக்கப்பட்டது. கடந்த 2016-2017 கல்வி ஆண்டில் மட்டும் 262 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக 2017-2018 ம் கல்வியாண்டில் சுமார் 19 இலட்சம் என உயர்த்தப்பட்டு தமிழகம் முழுவதும் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இதற்கான அறிவிப்பு செய்யப்பட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வு மாவட்டம் வாரியாக நடத்தப்பட்டது. அதில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தமிழகம் முழுவது 7 இடங்களில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி அன்று (26.11.2017) இராமநாதபுரம் ரயில்வே பீடர் ரோடு ஆப்பிள் மினி ஹாலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் M. நியாஸ் கான் தலைமையில் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட்-ன் சமூக மேம்பாட்டுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனி இப்ராஹீம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் ஃப்ரண்ட்-ன் மாநில பொருளாளர் வழக்கறிஞர் N முகம்மது சாஜஹான் BSc BL, SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் B அப்துல் ஹமீது, டாக்டர் ஜமீலுனிஷா BDS, சென்னை சீதக்காதி டிரஸ்ட் பொது மேலாளர் S சேக் தாவுது, கீழக்கரை அல் பையினா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் ஜாபிர் சுலைமான் BE.,MBA ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கினர். பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாட்டுத்துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் M முகம்மது இப்ராஹீம் MBA நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

இறுதியாக இராமநாதபுரம் டிவிசன் தலைவர் சேக் அப்துல்லாஹ் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இதில் ரூபாய் 2,50,000/- பதிப்பிலான கல்வி உதவித்தொகை சுமார் 40 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..