அமீரகத்தில் சிறந்த சேவைக்காக வெஸ்டர்ன் ஆட்டோ- “WESTERN AUTO” நிறுவனத்துக்கு விருது..

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்லாண்டுகளாக இயங்கி வரும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று வெஸ்டர்ன் ஆட்டோ ஆகும்.  இந்நிறுவனம் அமீரகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா, தாய்லலாந்து, ஹாங்காங்க், மத்தியக்கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா நாடுகளிலும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தின் சேவையை பாராட்டி சார்ஜா சாலை மற்றும் போக்குவரத்துக் கழகம் (SHARJAH ROADS & TRANSPORT AUTHORITY) சார்பாக 46வது அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு விருது வழங்கப்பட்டது.  அவ்விருது வழங்கும் விழா 27/11/2017 அன்று சார்ஜாவில் நடைபெற்றது.  இந்த விருதை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஏ.ஜே. கமால் அரசு அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் ஏ.ஜே கமால் மற்றும் இன்னும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விருது வெஸ்டர்ன் ஆட்டோ நிறுவனத்தின் சமூக அக்கறையின் செயல்பாட்டிற்காக வழங்கப்படுகிறது.  இந்த விருது சார்ஜா அரசால் வழங்கபட்ட ஒரு உயரிய அங்கீகாரமாகும்.  மேலும் இந்த விருது வெஸ்டர்ன் ஆட்டோவில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் தலைமை நிர்வாக அதிகாரி ஏ.ஜே. கமால்  ஆட்டோமொபைல் வணிகத்தில் சாதனை படைத்து வருவதற்கு ஒரு அங்கீகாரம் என்றாலும் மிகையாகாது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.