டேக்வோண்டா போட்டியில் பல பரிசுகளை வென்ற இஸ்லாமியா உயர் நிலைப் பள்ளி மாணவர்கள்..

கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளியில் பலதரப்பட்ட பள்ளிகள் கலந்து கொண்ட டேக்வோண்டா (TAEKWOUNDO) போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி  பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் பல வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

R.முகில்தரன் தங்க பதக்கத்தையும், J.முஹம்மது ஹுசைன் வெள்ளி பதக்கத்தையும், முகம்மது இர்ஃபான், கோபிநாத், வைநித்திஸ் மற்றும் மணிரூபன் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகம், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினார்கள்.