Home செய்திகள் பச்சை நிறமே.. பச்சை நிறமே.. பசுமை பணியில் கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றம்..

பச்சை நிறமே.. பச்சை நிறமே.. பசுமை பணியில் கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றம்..

by ஆசிரியர்

கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக இன்று (26/11/2017) கீழக்கரை நகர் முழுவதும் சுமார் 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. சமீபத்திய ஆய்வு படி இந்த வறண்ட சூழ்நிலை தொடர்ந்தால் நம் நாடு பாலைவனம் ஆகிவிடும் என்ற எச்சரிக்கை மணி அடிக்கிறதை. அதை மாற்றும் பொருட்டு பல சமூக நல அமைப்புகளும் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி, செடி வளர்ப்பதை ஊக்குவித்து வருகின்றனர்.

“வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்ற வாசகத்தை வாசிப்பதோடு நிறுத்தி விடாமல், ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு செடிகளை வளர்த்து இயற்கையை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும்.

இயற்கையின் அடிவேர் மரங்கள், அந்த மரங்களை காப்பது நம் அனைவரின் கடமையும் ஆகும். நாம் இயற்கைக்கு மாற்றமாக செய்யும் ஒவ்வொரு காரியமும் இயற்கை அன்னையை நாம் அழிக்கும் செயலாகும். மரம் வளர்ப்போம், இயற்கையை பாதுகாப்போம்.

மரம்நடும் பணியை கையில் எடுத்த அனைத்து ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்களையும் கீழை நியூஸ் வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறது.

TS 7 Lungies

You may also like

1 comment

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!