Home செய்திகள் கீழக்கரையில் காவலர்களையே அச்சுறுத்தும் காவல்நிலையம் ..

கீழக்கரையில் காவலர்களையே அச்சுறுத்தும் காவல்நிலையம் ..

by ஆசிரியர்

நம் நாட்டின் பாதுகாப்பில் ராணுவத்திற்கு அடுத்து முக்கியத்துவம் மிகுந்தவர்கள் காவலர்கள். ஒவ்வொரு காவலர்களும் தினம் தினம் பல வகையான பிரச்சினைகளை சந்திக்க கூடியவர்களாக இருக்கிறார்கள். கால நேரம் பார்க்காமல், இரவு பகல் என்ற பாராபட்சம் இல்லாமல், வெயில் மழை எதுவாக இருந்தாலும் ஆட்சியாளர்கள் முதல் சாமானிய மனிதன் வரை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் காவலர்கள். இந்த முக்கியம் வாய்ந்த பணியை செய்யும் அவர்களுக்கு பணி செய்யும் இடத்தை கண்ணியம் உடையதாக அமைத்துக் கொடுக்க வேண்டியது அத்துறை சார்ந்த அரசு அதிகாரிகளின் முக்கிய கடமையாகும்.

கீழக்கரை காவல் நிலையத்தின் பரிதாப நிலையை பார்க்கும் பொழுது மக்களை பாதுகாக்கும் காவலர்களுக்கே இந்த அவல நிலையா? என்று தோன்றும் அளவுக்கு கீழக்கரை காவல் நிலையம் பரிதாப நிலையில் உள்ளது. 1987ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த காவல் நிலையம் ௭ப்போது இடிந்து விழும்? என்ற நிலையில் உள்ளது. திறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை ௭ந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இங்கு பணிபுரியும் காவலர்களும் இக்காவல் நிலையத்திற்கு வரும் உயர் அதிகாரிகளின் கருணை பார்வை படும் என்ற நம்பிக்கையிலேயே இருந்து வருகிறார்கள். கடந்த வரும் கீழக்கரையில் புதிய டி.எஸ்.பி அலுவலகம் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த காவல் நிலையத்தின் அவல நிலையை உடனடியாக சரி செய்யவார்களா சம்பந்தபட்ட அதிகாரிகள்??.

மேலும் கீழக்கரை காவல் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறையும் பல வருடங்களாக இருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம். இங்கு காவல்துறை பற்றாக்குறையாக மூன்றில் ஓரு பங்கு கூட காவலர்கள் இல்லை, இதனையும் சரிசெய்வாரா மாவட்ட கண்காணிப்பாளர் ஒம்பிரகாஸ் மீனா???

TS 7 Lungies

You may also like

1 comment

Syed Abuthaheer November 27, 2017 - 2:31 am

அரசாங்கத்தை பொறுத்தவரை கீழக்கரை கோடீஸ்வர்ர்கள் வாழும் ஊர் அந்த ஊருக்கு தேவையானவற்றை அவர்களே செய்துகொள்வார்கள் என்ற பார்வையிலேயே இருப்பதால்
தான் காவல்நிலையத்திற்க்கு இந்த நிலைமை.இந்த பார்வையை அரசாங்கம் மாற்றிக்கொள்ளவேண்டும்.அங்கு பணிபுரியும் காவலர்களும் மனிதர்கள்தான் அவரை நம்பி அவரின் குடும்பத்தினர் உள்ளனர் என்ற விசயத்தை சம்பந்தப்பட்ட அமைச்சரும் உயர்அதிகாரிகளும் கருத்தில் கொள்ளவேண்டும்.

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!