Home செய்திகள் கீழக்கரை கண்ணாடிவாப்பா பள்ளியில் “ஃபுட்ஸல்” என்ற “குறு கால்” பந்தாட்ட போட்டி..

கீழக்கரை கண்ணாடிவாப்பா பள்ளியில் “ஃபுட்ஸல்” என்ற “குறு கால்” பந்தாட்ட போட்டி..

by ஆசிரியர்

கீழக்கரை கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் பள்ளியில் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கிடையிலான 14 வயதிற்குட்பட்ட பிரிவு ஐவர் கால் பந்தாட்ட (FUTSAL) போட்டி 23.11.2017 அன்று நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட அளவில் “ஃபுட்ஸல்” என்றழைக்கப்படும் இந்த ‘குறு கால் பந்தாட்டம்’ (Mini Football) நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதில் பனைக்குளம் பஹருதீன் அரசு மேனிலைப் பள்ளி, உச்சிப்புளி நேஷனல் அகடமி, அழகன்குளம் நஜியா மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, வெண்குளம் ஷிஃபான் நூர் குளோபல் அகடமி, திருஉத்தரகோசமங்கை அரசு மேனிலைப் பள்ளி, இராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, வண்ணாங்குண்டு அரசு மேனிலைப் பள்ளி, சித்தார்கோட்டை முஹம்மதியா மேனிலைப் பள்ளி, மண்டபம் கேம்ப் அரசு மேனிலைப் பள்ளி, கீழக்கரை தீனியா மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, திருப்புல்லாணி அரசு மேனிலைப் பள்ளி, கீழக்கரை கண்ணாடிவாப்பா இண்டர்நேஷனல் பள்ளி, தேவிபட்டிணம் கிருஷ்ணா இண்டர்நேஷனல் பள்ளி, இராமநாதபுரம் இராஜசூர்ய மடை அம்ரிதா வித்யாலயா, இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, பெரியபட்டிணம் அல் கலம் பள்ளி, பெரிய பட்டிணம் அரசு மேனிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து விளையாட்டு வீரர்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்தினர்.

மொத்தம் 16 பள்ளிகள் போட்டியில் களம் கண்டனர். பனைக்குளம் பஹருதீன் அரசு மேனிலைப் பள்ளி வெற்றி வாகை சூடி முதல் நிலை கோப்பையை கைப்பற்றினர். இரண்டாவதாக கிருஷ்ணா இண்டர்நேஷனல் பள்ளி வாகை சூடினர்.

இவ்விழாவை மாவட்ட விளையாட்டு கல்வி ஆய்வாளர் வசந்தி தேசியக் கொடி ஏற்றி துவக்கி வைத்து வைத்து ஊக்க உரையாற்றினார். கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் செய்யது முஹம்மது சலாஹுதீன் முன்னிலை வகித்து மாணவர்களிடையே உரையாடும்போது இதுபோன்ற விளையாட்டுகள் மாணவப் பருவத்தில் ஒற்றுமை உணர்வையும் குழு முயற்சியில் வெற்றி இலக்கை எட்டும் நற்பண்பையும் வளர்க்க காரணியாகத் திகழும் என்பதை எடுத்துரைத்தார்.

மாவட்ட கால்பந்து கழக செயலர் குலசேகர பாண்டியன், கீழக்கரை காவல் உதவி ஆய்வாளர் தென்கரை மஹாராஜா ஆகியோர் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அவர்களின் ஆர்வத்தினைப் பாராட்டினர்.

மண்டபம் அரசு மேனிலைப் பள்ளி முதுநிலை உடற் கல்வி இயக்குநர் இரமேஷ், திருப்புல்லாணி அரசு மேனிலைப் பள்ளி உடற் கல்வி இயக்குநர் ஜாஹிர் ஹுசைன், இராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ். மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி உடற் கல்வி இயக்குநர் முனியசாமி, டி.டி. விநாயகர் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி உடற் கல்வி இயக்குநர் சிவா, இராஜா மேனிலைப் பள்ளி உடற் கல்வி இயக்குநர் பிரபாகரன், கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி உடற் கல்வி இயக்குநர் சுரேஷ், முஹம்மது சதக் பாலிடெக்னிக் உடற் கல்வி இயக்குநர் சத்தியேந்திரன், கால்பந்து பயிற்றுனர்கள் பாரதி ராஜா, இராஜ்குமார், மாவட்ட முன்னணி கால்பந்து வீரர் வினோத் குமார் மற்றும் போட்டியில் பங்கேற்ற பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களும் கலந்து உவ்விழாவினை சிறப்பித்தனர். மேலும், விளையாட்டு வீரர்களையும், விழாவிற்கு சிறப்பாக களம் அமைத்து அனைத்து விளையாட்டு ஆர்வலர்களையும் ஒருங்கிணைத்து சீரியமுறையில் போட்டியினை நடத்திய பள்ளி முதல்வரையும், நிர்வாகத்தினரையும் மற்றும் அனைவரையும் பாராட்டினார்.

பள்ளி முதல்வர் இராஜேஷ் கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். பள்ளி மேலாளர் அபுல் ஹசன் நன்றியுரை நல்கினார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!