கீழக்கரையில் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் …

கீழக்கரை தாலூகா அலுவலகம் முன்பு இன்று(24-11-2017) மாலை ஜாக்டோ ஜியோ ( ஆசிரியர் ) கூட்டமைப்பினரின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியம் திருத்தப்படுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இப்போராட்டத்திற்கு கீழக்கரை சார்பு ஆய்வாளர் வசந்த குமார் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு வழங்கினர்.