கீழக்கரை கண்ணாடி வாப்பா மெட்ரிக் பள்ளயில் டேவாண்டோ போட்டி..

கீழக்கரையில் கண்ணாடி வாப்பா மெட்ரிக் பள்ளயில் கல்வியை போதிப்பதுடன் மாணவர்களுக்கு தேவையான பல உலக விசயங்களையும் கற்பித்து வருகிறது. ஆகையால் இப்பள்ளி மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் முற்றிலுமாக வித்தியாசமான முறையில் சிறந்து விளங்குகின்றனர்.

இப்பள்ளியின் முயற்சியின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு ஆரோக்கியத்தை பேணும் விதமாக பல பள்ளிகள் கலந்து கொள்ளும் டேவாண்டோ போட்டிகள் இன்று (24-11-2017) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்போட்டிகள் பள்ளியின் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இராமநாதபுர மாவட்டம் மற்றும் மதுரை மாவட்ட பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.