அறியாத சமூக அமைப்பு பெயரில் சமூக சேவை பெயரில் வசூல் – பொதுமக்கள் போலி ஆசாமிகளிடம் கவனம் தேவை…

கீழக்கரையில் பல சமூக அமைப்புகளும், தனி நபர்களும் தேவையுடையவர்களுக்கு உதவி செய்வதை அறிந்து, தவறான நோக்கத்துடன் கீழக்கரையை நோக்கி படையெடுக்கும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் அவ்வாறு வசூலிக்கும் நபர்களின் எந்த ஒரு விபரமும் அறியாமல் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான நபர்களுக்கு நல்லுல்லங்கள் உதவியும் செய்தும் விடுகின்றனர். இதனால் உண்மையாகவே தேவையுடையோருக்கு கிடைக்க வேண்டிய பலன் தகுதியில்லாதவர்களிடம் சேர்ந்து விடுகிறது.

இன்று கீழை நியூஸ் நிருபர் மற்றும் நிஷா பவுன்டேசன் நிறுவனருமாகிய சித்திக்கிடம் சமூக நீதி கழகம் என்ற அமைப்பில் இருந்து ஏழை மக்களுக்கு உதவும் வகையில் ஆட்டோ வாங்க வசூல் செய்ய வந்துள்ளோம் என்று அணுகியுள்ளார்கள். அவ்வாறு அணுகிய அந்த இரு நபர்களும் சமூக சேவை என்ற பெயரில் எந்த சேவையும் செய்யாமல் ஒரு கழகத்நின் மாநில தலைவர் என்று சொல்லி வசூல் வேட்டையை கீழக்கரை மற்றும் காயல்பட்டினம், திருநெல்வேலி போன்ற ஊர்களில் வசூல் செய்ய தொடங்கியுள்ளார்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களிடம் என்ன சேவை செய்ய போகிறீர்கள் என்று விசாரித்த பொழுது ஆட்டோ வாங்கி இலவச மருத்துவ சேவை செய்போவதாக தெரிவித்துள்ளனர், பின்னர் மேல் விபரங்களை விசாரித்த பொழுது முன்னுக்கு பின் முரணாக பதில் தந்துள்ளனர். பின்னர் தீர விசாரித்த பொழுது தாங்கள் வறுமையில் உள்ளவர்கள் எங்களுக்காவது தனிப்பட்ட முறையில் உதவி செய்யுங்கள், வீடில்லாமல் இருக்கிறோம் ஒரு லட்சம் தேவை என்ற ரீதியில் மன்றாட தொடங்கியுள்ளனர்.

பின்னர் வசூல் செய்ய வந்த நபர்களுக்கு அறிவுரைகளையும் கூறி, இதுபோன்ற வசூல்களை கீழக்கரையில் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து திருப்பி அனுப்பபட்டுள்ளனர். உடனே வந்தவர்கள் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து உடனே கீழக்கரையில் இனி வசூல் செய்யமாட்டோம் என்று உத்திரவாதம் அளித்து சென்றுள்ளார்கள்.

பொதுமக்களை தயவு செய்து வெளியூரில் இருந்து சமூக சேவை என்ற பெயரில் வசூல் செய்ய வருபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு அணுகும் பொழுது உங்கள் தெரு ஜமாத்தார் அல்லது உங்கள் தெருக்களில் அமைந்து இருக்கும் நலப்பணிகள் செய்யும் சங்கங்கள் அல்லது அமைப்புகளிடம் தெரிவியுங்கள்.