துபாய் நகராட்சி மற்றும் “CARS” வணிக குழுமம் இணைந்து நடத்திய “ Cleanup The World” தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி..

இன்று (22-11-2017) துபாய் நகராட்சி மற்றும் CARS நிர்வாகமும் இணந்து தூய்மையை  வலியுறுத்தும் விதமாக “உலகை தூய்மைப்படுத்துவோம் 2017” (“Cleanup the World 2017”) என்ற பாதாகைகளோடு விழிப்புணர்்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பிரச்சாரத்தில் துபாய் நகராட்சியும்,  கார்ஸ் குழுமமும் (Cars Group) இணைந்து முகைஸ்னா பகுதியில் அமைந்துள்ள சோனாப்பூரில் குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

வேலை பளுவுக்கு மத்தியிலும் இதில் ஏராளமான ஊழியர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.