ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை…

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரபு அமீரகத்தில் ரபியுல் அவ்வல் மாதத்தில் இறைத்தூதர் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடவது வழக்கம், அதனையொட்டி நவம்பர் மாதம் 30ம் தேதியும், அரபு அமீரகத்தின் தேசிய தினம் டிசம்பர் 2ம் தேதி சனிக்கிழமை வருவதால் அரசாங்க ஊழியர்களுக்கு டிசம்பர் 3ம் தேதியும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு டிசம்பர் 2 வரை மூன்று நாட்கள் மட்டுமே விடுமுறை என்பது குறிப்பிடதக்கது. இந்த அறிவிப்பை அமீரக மனித வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த நீண்ட விடுமுறையை ஒட்டி குடுபத்தினரோடு சுற்றுப்பயணங்கள் செல்லவும். இளைஞர்கள் கூட்டமாக விடுமுறை தலங்களுக்கு செல்லவும் உற்சாகமாக தயாராகி வருகிறார்கள். இந்த விடுமுறையை ஒட்டி வாடகை வாகனங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது மற்றும் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது.