Home செய்திகள் கீழை நியூஸ் இணையதள செய்தி எதிரொலி – நிம்மதி பெருமூச்சு விட்ட விவசாயிகள், நிழல் கிடைத்தது…

கீழை நியூஸ் இணையதள செய்தி எதிரொலி – நிம்மதி பெருமூச்சு விட்ட விவசாயிகள், நிழல் கிடைத்தது…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மத்திய கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய காலை முதலே கடும் வெயிலில் நிழல் கூட இல்லாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர், இதை நேற்று (17-11-2017) கீழை நியூஸ் இணையதளத்தில் புகைப்படத்துடன் “நாட்டின் முதுகெலும்பு விவசாயம் – ஆனால் விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் வங்கி” ௭ன்று செய்தி வெளியாகியது. இச்செய்தியை இளைஞர்கள் மூலம் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் ௮ப் மூலம் பரவியது.

இது ௨டனடியாக மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் அடிப்படையில் கீழக்கரை தாசில்தார் கணேசனிடம் விவசயிகளுக்கு மாற்று இடம் வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது, இதையடுத்து இன்று வங்கி ௭திரே உள்ள சுப்ரமணியன் – ஜெயலெட்சுமி ௭ன்ற தனியார் பள்ளியில் விவசாயிகளை அமர வைத்து ௭ந்த ஒரு தள்ளு முள்ளு இல்லாமல் பயிர் காப்பிடு செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

இப்பணியில் ஈடுபட்ட காவல்துறையை சார்ந்த பூமுத்து மற்றும் அவருடன் பணியில் ஈடுபட்ட காவல்துறையைச் சார்ந்தவர்கள் அனைவரும் பாராட்டுதலுக்குரியவர்கள்.

http://keelainews.com/2017/11/17/farmer-issue/

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!