Home கல்வி மாத்தி யோசி – எதையும் தனித்துவத்துடன் செய்யும் அல் பையினா பள்ளி – முதியோரை கண்ணியப்படுத்திய “GRANNIES DAY” (கண்ணுமா / பாட்டியர் தினம்)…

மாத்தி யோசி – எதையும் தனித்துவத்துடன் செய்யும் அல் பையினா பள்ளி – முதியோரை கண்ணியப்படுத்திய “GRANNIES DAY” (கண்ணுமா / பாட்டியர் தினம்)…

by ஆசிரியர்

கீழக்கரை அல் பையினா பள்ளி தனித்துவத்துடன் மாணவ, மாணவிகளுக்கு உலக விசயங்களை மனதில் பதிய வைக்க கூடியவர்கள். அந்த வரிசையில் பரபரப்பான வாழ்கையில் நம் முன்னோர்கள் யார் என்பது கூட அறியாமல் வளரும் இளைய சமுதாயமே உருவாகி வருகிறது. இந்நிலையை மாற்றும் நோக்கத்துடன் இன்று அல் பையினா பள்ளி நிர்வாகத்தினால் முதியோரை கண்ணியப்படுத்தும் வகையில் “GRANNIES DAY” ( பாட்டியர்கள் / கண்ணுமா தினம்) சின்னஞ்சிறு மாணவர்களை வைத்து கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் வண்ண வண்ண ஆடைகள் அணிந்து தங்களுடைய பாட்டிமார்களை பற்றிய கருத்துக்களையும், எண்ணங்களையும் கைரேகைகளை மரம் போல் (PALM TREE) வரைந்து அதன் மூலம் வெளிப்படுத்தி இருந்தது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.

இந்த விழாவில் பாட்டியர்கள் பள்ளி வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டு தங்களுடைய பேரப்பிள்ளைகளால் ஆச்சரியப்படுத்தும் வகையில் கிரீடம் அணிவிக்கப்பட்டு, அவர்களுக்கு விருப்பமான பொருட்கள் குழந்தைகளின் கைகளால் கொடுக்கப்பட்டது. பின்னர் பாட்டியர்களுக்கான விளையாட்டுகளும் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வு முதியோர்களின் முக்கியத்துவம், அவர்களால் வாழ்க்கைக்கு கிடைக்கும் அனுபவங்கள், முதியவர்களை மதிக்க வேண்டியதின் அவசியம், முதியவர்கள் இளைய தலைமுறையினருக்கு கற்று தந்த பாடங்கள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கு தளமாக அமைந்தது.

இந்நிகழ்ச்சி மூலம் பாட்டிமார்கள் தங்களுடைய மனக்கஷ்டம் மற்றும் உடல் உபாதைகளை மறந்து குழந்தையாகவே மாறிவிட்டார்கள் என்றால் மிகையாகாது. இது போன்று ஓவ்வொரு பள்ளிகளும் மாணவ, மாணவியருக்கு முதியவர்களை மதிக்கும் விதத்தைக் கற்றுக்கொடுக்கும் பொழுது வருங்கால சமுதாயம் நம் வரலாற்றை போற்றும் சிறந்த சமுதாயமாக வளரும்.

புகைப்படத் தொகுப்பு

TS 7 Lungies

You may also like

1 comment

Ameen - சவுதி அரேபியா November 21, 2017 - 12:55 pm

Good initiative..

these kind of activities should be spread in other schools in kilakarai.
my best wishes. Noohu ameen – North Street Kilakarai

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!