நாட்டின் முதுகெலும்பு விவசாயம்.. ஆனால் விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் வங்கிகள். கீழக்கரையில் பரிதாபம்..

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் நெல்பயிர் காப்பீடு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலகரிடமிருந்து அடங்கல் சான்றினை பெற்று ஏக்கருக்கு ₹.322/-ஐ பீரிமிய தொகையாக செலுத்தி சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் / தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் / வணிக வங்கிகளில் செலுத்தி 26/11/2017குள் காப்பீடு செய்யலாம் என்று ராமநாதபுரம் ஆட்சியர் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனால் ஆட்சியரின் சுற்றறிக்கையை காற்றில் பறக்க விட்டவர்களாக கீழக்கரையில் இராமநாதபுர மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை தவிர வேறு எந்த வங்கியும் விவசாயிகள் காப்பீடு செய்வதற்கான வங்கி கணக்கு துவக்க வழிவகுக்கவில்லை.

மேலும் கீழக்கரையில் உள்ள ஒரே வங்கியில் விவசாய பெருமக்கள் கூடியதால் காலை முதலே மக்கள் வெள்ளம் அலை மோதியது. ஆனால் இதற்கான எந்த ஒரு முன்னேற்பாட்டையும் வங்கி நிர்வாகம் செய்யாததால் மிகவும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டது, சில பெண்களில் நெரிசலில் மயக்கமுற்றனர்.

விவசாயிகள்தான் எங்கள் முன்னுரிமை என்று தம்பட்டம் அடிக்கும் மாநில, மத்திய அரசுகள் இதுதான் விவசாயிகள் நலன் காக்கும் லட்சணமா???

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Trackback / Pingback

  1. கீழை நியூஸ் இணையதள செய்தி எதிரொலி - நிம்மதி பெருமூச்சு விட்ட விவசாயிகள், நிழல் கிடைத்தது... - NEWS WORLD

Comments are closed.