Home செய்திகள்உலக செய்திகள் தங்க நகையில் கலப்படம்-வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

தங்க நகையில் கலப்படம்-வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

by Mohamed

குவைத்தின் அல் ராய் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகைக் கடையில் போலியான ஆபரண தங்க நகைகள் விற்று வந்தனர்.தகவல் அறிந்த வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சத்தின் ஆய்வாளர்கள்  நடத்திய சோதனையில் 3.94 கிலோ எடை கொண்ட போலி   தங்க  நகைகள் கண்டறியப்பட்டது.

அந்த நகைகள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.உடனே நகைக் கடை மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இனி வரும் காலங்களில் ஆபரண நகைகளின் தரம் மற்றும் எடை இயந்திரம் போன்ற உபகரணங்கள் சோதனைக்கு உட்ப்படுத்தப்படும் என்று வணிகம் & தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே போல்  எங்கும் ஊழல் எதிலும் ஊழல் நிறைந்த நம் நாட்டில் எங்கும் கலப்படம் கலப்படம் எதிலும் கலப்படம் என்று சொல்லும் அளவுக்கு உணவுப் பொருட்கள் தொடங்கி தங்க நகைகள் வரை கலப்படம் மிகைத்துள்ளது  என்று ஊடகங்களின் வழியாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

சில நகைக்கடைகள் செய்க்கூலியைக் குறைத்து அதை சமன் செய்ய தங்க நகையில் உள்ள வெற்றிடத்தின் துவாரத்தில் மட்டமான பொருட்களை அடைத்து அதன் எடையை அதிகரித்து அசலான தங்கத்தின் விலைக்கு விற்பனை செய்கிறார்கள் அதன் மூலம் அதிக லாபத்தையும்,வியாபாரத்தையும் பெருக்குகிறார்கள்.கோடிகளை கொட்டி சினிமா நட்ச்சத்திரங்களை வைத்து (செய்க்கூலி இல்லை,சேதாரம் இல்லை, தரம் அது நிரந்தரம் ) என்று விளம்பரம் செய்கிறார்கள்  அதை நம்பிய வாடிக்கையாளர்களுக்கு இறுதியில்  சேதாரம் தான் மிஞ்சுகிறது.

கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் அதிக விலை என்று கூட பாராமால் தரத்தை மட்டுமே நம்பி வாங்கும் தங்க நகைகள் போலி என்று தெரிய வரும் போது வாடிக்கையாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

இது போன்ற குற்றங்களை தடுக்க அவ்வப்போது சோதணை நடத்தி அரசு துரித நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலப்படங்களை தடுக்க முடியும் என்றாலும் வாடிக்கையாளர்களும் ஊழல் நிறைந்த சமூகத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது  மிகவும் அவசியமான ஒன்றாகும்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!