இந்தியாவில் இஸ்லாமிய வங்கி கோரிக்கை நிராகரிப்பு.

இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகள் அறிமுகப்படுத்துவதற்காக வைத்துள்ள கோரிக்கையை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

வங்கி மற்றும் நிதி சேவைகள் சமமாகவும்,விரிவாகவும் அனைத்து குடிமக்கள் அடையும் வகையில் அமைத்து இருப்பதால் இஸ்லாமிய வங்கி கோரிக்கையை செயல்படுத்த போவதில்லை என்று தகவல் அறியும் சட்டத்தின் (RTI) கீழ் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (PTI) சார்பாக செய்யப்பட்ட மனுவிற்கு மத்திய ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

இது குறித்து இந்தியன் இஸ்லாமிக் பைனான்ஸ் செண்டரின் (ICFC) பொது செயளாலர் அப்துர் ராகீப் கூறுகையில்: ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வந்த நிலையில், இந்தியாவில் இஸ்லாமிய வங்கியை அறிமுகப்படுத்துவதற்கு ஊக்கத்தோடு செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் வட்டி இல்லா கடன் சேவையை நடைமுறைப்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை அதற்கான வழி பிறக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு துரதிஷ்டவசமானது, அதனை நிதி அமைச்சகம் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார். ஷரியா – இஸ்லாமிய வங்கியின் மூலம் வட்டி இல்லா கடனை பெற முடிகிறது. இது முஸ்லிம் மக்களுக்காக மட்டும் உருவாக்கப்படுவது கிடையாது மாறாக அனைத்து சமூக மக்களும் பயம் அடையும் வகையில் அமைக்கப்படுகிறது.

மேலும், அரசியல் உள்நோக்கமே முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் லண்டன், ஹாங்காங், டோக்கியோ போன்ற நகரங்களில் இஸ்லாமிய வங்கி செயல்படும் போது ஏன் மும்பையில் செயல்பட முடியாது என்ற கேள்வியையும் அப்துர் ராகீப் எழுப்பியுள்ளார்.

கந்து வட்டியால் உயிரை மாய்த்து கொள்ளும் குடும்பங்களுக்கு மத்தியில் இது போன்ற இஸ்லாமிய வங்கிகள் சமூக வளர்ச்சிக்கு வித்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..