Home செய்திகள் கீழக்கரையும்… பாரம்பரியமும்….

கீழக்கரையும்… பாரம்பரியமும்….

by ஆசிரியர்

கீழக்கரை என்ற அழைக்கப்படும் கடலோர ஊருக்கென்று எப்பொழுதும் ஒரு தனி பாரம்பரியம் உண்டு. உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பேச்சு நடை, கல்யாண முறை, வியாபார முறை அலுவல் நேரம் என்று எல்லாவற்றிலும் தனித்தன்மை உண்டு.  ஆனால் சமீப காலமாக நவீன மாற்றம் என்ற பெயரில் பாரம்பரிய செயல்பாடுகள் உருமாற்றம் பெற்றுக் கொண்டே வருகிறது. அம்மாற்றங்கள் எல்லாம் மார்க்க வழிபாடுகளை பாதிக்காத வரை அதை மாற்றமாகவே பார்க்கப்பட்டது,  ஆனால் அதுவே பாதிப்பை ஏற்படுத்தும் பொழுது இந்த நவீன மாற்றம் தேவையா என்ற எண்ணங்கள் மேலோங்குகிறது.

கீழக்கரைக்கே உரித்தான முறையில் இரவு நேரங்களில் மட்டுமே நடந்து வந்த கல்யாணங்கள் செலவினங்களையும், வீண்விரயங்களை குறைக்கவும், வெளியூர் நண்பர்கள் கலந்து கொள்ள வசதியாகவும் பகல் கல்யாணமாக மாறியது, பலபேர் மனதில் குறையாக இருந்தாலும் காலத்திற்காக ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்கள்.

ஆனால் சமீபத்தில் மாற்றம் என்ற பெயரில் ஆண்டாண்டு காலமாக வெள்ளிக்கிழழை சிறப்புத் தொழுகையை நிறைவேற்றும் விதமாக வெள்ளிக்கிழமைகள் எல்லாம் விடுமுறை அளித்த பள்ளிகள் தற்பொழுது ஞாயிறு அன்று விடுமுறை அறிவிக்க தொடங்கியுள்ளார்கள். ஆனால் இதற்கு பள்ளி நிர்வாகமோ, அரசுத்துறை மூலமாகவும், சில ஆசிரியர்களின் நிர்பந்தத்தாலும் மாற்றப்படுகிறது என்ற காரணத்தை முன் வைக்கிறது.  ஆனால் பள்ளி நிர்வாகம் நினைத்தால் தன்னுடைய நிலைபாட்டையும், பாரம்பரியத்தையும் எடுத்துக் கூறினால் இந்த முடிவை தவிர்க்கலாம். சில பள்ளி நிர்வாகத்தின் இந்த செயல்பாடு கீழக்கரை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  தற்சமயம் இப்பிரச்சினையை மக்கள் டீம் மற்றும் சமுதாய அமைப்புகள் கையில் எடுத்து இந்த முடிவை எடுத்துள்ள சம்பந்தப்பட்ட தெரு சங்கத்தில் முறையிட உள்ளார்கள்.

முன்னாள் மாணவர்களின் ஆதங்கமும், சமூக ஆர்வலர்களின் கவலையும் பள்ளி நிர்வாகத்தால் கண்டு கொள்ளப்படுமா?? பொறுத்திருந்து பார்ப்பபோம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!