கீழக்கரை, காயல்பட்டினம் மற்றும் தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கு அமீரகத்தில் சமூக சேவையை பாராட்டி விருது

அமீரகத்திலுள்ள தமிழர்களில் ஒவ்வொரு துறையிலும் மிகச்சிறந்த உழைப்பை முன்னெடுத்துச் சாதித்தவர்கள் பட்டியலை (“Dear Health Medical centre “, Ajman,UAE). மருத்துவ நிர்வாகம் அவரவர்களின் தனித்திறமையை ஊடகங்கள் வாயிலாக ஆய்ந்தெடுத்து 28 தமிழர்கள் இந்தச் சிறப்பு விருதுகளைப் பெற்றுக் கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர்.எனக்கு “BEST PHOTOGRAPHY” விருதினை H.H.SHEIKH ABDUL MUNAEM BIN NASSER AL NUAIMI ,AJMAN . அவர்களில் கையால் வழங்கி கெளரவித்தார்கள்.

கீழக்கரை டைம்ஸ் நிறுவனர் ஹமீது யாசீன் மற்றும் கீழக்கரை கிளாசிஃபைட் எஸ்.கே.வி சேக் ஆகியோருக்கு அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றி வரும் பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வண்ணம் அஜ்மான் DEAR HEALTH மருத்துவமனை சார்பாக EXCLLENCE AWARDS வழங்கப்பட்டது.

கீழக்கரை டைம்ஸ் ஹமீது யாசீன் கீழக்கரை மக்களுக்கென பிரத்யேக இணைய பத்திரிக்கையை கீழக்கரை மக்களுக்காக முதலில் ஆரம்பித்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

கீழக்கரை கிளாசிஃபைட் எஸ்.கே.வி சேக் பகுதி நேரமாக வேலை வாய்ப்பு இளைஞர்களுக்கு உதவும் வண்ணம் வேலை வாய்ப்புகளை பதிந்து பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்சமயம்  அதையே முழுநேரப் பணியாக செய்து வருகிறார்.

வாழ்நாள் சாதனையாளராக எங்கள் ஜெ.ஷம்சுதீன் ஹாஜியார் (President Aiman ) அய்மான் சங்கம், மற்றும் ஜெஸிலா பானு , வஹீதா ஜைதி, காயல் பட்டினம் மௌலவி சுலைமான் மஹ்லரி , SPECIAL TALENTED PERSONALITY கார்த்திக் , முஹம்மத் பஹீம், பேராசிரியர் ஜேக்கப், கவி அன்பன் கலாம் மற்றும் பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது .

இந்த வெற்றியாளர்களை வாழ்த்துவதில் Keelai Media & Advertisement Pvt. Ltd (www.keelainews.com) மகிழ்ச்சியடைகிறது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..