கீழக்கரையில் தவ்ஹீத் ஜமா அத் தொடர்ந்து நிலவேம்பு வினியோகம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் …

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பாக 12/11/2017 அன்று காலை டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொம்பூதி, பலஞ்சரை, நத்தம், குளபதம், மேலமடை, வேளானூர், வைகை, காஞ்சிரங்குடி ஆகிய கிராமங்களுக்கு சென்று நிலவேம்பு கசாயம் சுமார் 2000 நபர்களுக்கு நான்காம் கட்டமாக வழங்கப்பட்டது. நிலவேம்பு கசாயத்தின் பயனை அறிந்த கிராம மக்கள் குறிப்பாக சிறுவர், சிறுமியர் ஆர்வத்துடன் வாங்கி அருந்தினார்கள்.

குளபதம் என்னும் கிராமத்தில் பள்ளிக்கூட வகுப்பறைகளுக்கு நேரடியாக சென்று மாணவ,மாணவிகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டது. வயல்களில் வேலை செய்தவர்கள் கூட ஒலிப்பெருக்கி மூலமாக நாம் செய்த அறிவிப்பைக் கேட்டதும் வேலைகளை சற்று நிறுத்திவிட்டு வாகனத்தை நோக்கி விரைந்து வந்து கசாயத்தை வாங்கி அருந்தியது குறிப்பிடதக்கது.

TNTJ இராமநாதபுரம்(தெற்கு) மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் வீடு வீடாகவும் நேரடியாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகின்றது.

புகைப்படத் தொகுப்பு …..