திருட்டுதனமாக மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்து நடவடிக்கை …

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்த வடக்கு மூக்கையூர் மலட்டாற்று படுகையில், அனுமதி எதுவுமின்றி சட்டவிரோதமாக சிலர் ஆற்றுமணல் அள்ளிவருதாக வட்டாட்சியருக்கு வந்த தகவல் வந்தது.

அதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு ரோந்து சென்ற கடலாடி வட்டாட்சியர் ராஜேஸ்வரி, அப்பகுதியில் மணல் ஏற்றி வந்த டிராக்டரை மடக்கி சோதனை செய்ததில், எந்த அனுமதியுமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தது தெரிய வந்ததையடுத்து ஆப்பனூர் பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் என்பவருடைய டிராக்டரை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.

இப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் மணல் திருட்டை துணிச்சலுடன் நடவடிக்கைகள் எடுத்து வரும் கடலாடி வட்டாட்சியரை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.