கீழக்கரை நகர் SDPI கட்சி சார்பாக மருத்துவ உபகரண உதவி..

கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த பெண்மணி ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்பு நீரழிவு நோயின் (sugar) காரணமாக ஒரு கால் மருத்துவர்களால் அகற்றப்பட்டது.  இதைத் தொடர்ந்து அப்பெண்மணிக்கு உதவும் விதமாக கீழக்கரை SDPI கட்சி சார்பாக சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கீழக்கரை SDPI கட்சி தலைவர் அஷ்ரஃப் தலைமையில் , மேற்க்கு கிளை தலைவர் சுபைர், மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த சக்கர நாற்காலி இவ்வமைப்பின் இணை செயலாளர் மற்றும் நிசா பவுண்டேசன் நிருவனமான J.சித்திக் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு, மாவட்ட தலைவர்(கிழக்கு) அப்பாஸ் அலி ஆலிம் பயனாளிக்கு வழங்கினார்.