கீழக்கரை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பணியிட மாற்றம்…

கீழக்கரை நகராட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிர மூர்த்திக்கு சென்னை தலைமை அலுவலகத்தில் (CMA) இன்று (10-11-2017)  பணியிட மாறுதல் உத்தரவு வந்ததை அடுத்து பணியிட மாற்றம் ஆகிறார்.

திண்ணாயிரமூர்த்தி கடந்த 6 வருட காலமாக பணியாற்றி வரும் நிலையில், இவர் மீது மக்கள் டீம் மற்றும் சில சமூக அமைப்புகள் இவர் தன்னுடைய பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து வந்தார் என்று ஆட்சியரிடம் மனு கொடுத்ததும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இவருக்கு மாற்றமாக புதிதாக பொறுப்பேற்க போகும் துப்புரவு ஆய்வாளர், கீழக்கரை மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் பணியாற்றுவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.