அமீரக மண்ணில் தடம் பதித்த தமிழ் மைந்தன்..

திருநெல்வேலியை சேர்ந்தவர் சையத் அலி ( வயது 51 ). இவர் துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ரன் தி டிராக் (Run the Track) என்ற ஓட்டப் போட்டி 3, 5 மற்றும் 10 கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளுக்கு நடந்தது. இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகிய பலர் ஆயிரக் கணக்கில் பங்கேற்றனர். இதில் தமிழக வீரர் சையது அலி கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார். அவருக்கு கோப்பை, பதக்கம் ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டார். பரிசு பெற்ற அவருக்கு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.

இது குறித்து சையது அலி கூறியதாவது, இந்த பரிசினை பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நான் தொடர்ந்து ஓட்டப் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இதனால் உடலும்,மனதும் மிகவும் நலமாக இருக்கிறது. எனவே இங்கு வேலை செய்பவர்கள் தங்களது உடல் நலனை சிறப்பாக வைத்துக் கொள்ளும் பொருட்டு உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.