அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசை வென்று அசத்திய கும்பிடுமதுரை அரசுப்பள்ளி ..

கீழக்கரையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக திருப்புல்லாணி வட்டார மையம் சார்பில் அறிவியல் கண்காட்சி கீழக்கரை ஊராட்சி தொடக்க பள்ளி 2ல் நடைபெற்றது.

அங்கு நடைபெற்ற தொடக்கப் பள்ளிகள் மற்றும் உயர் தொடக்கப் பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சியில் கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சிறந்த பள்ளிக்கான விருது (Best school award) மற்றும் சிறந்த படைப்பாற்றலுக்கான முதல் பரிசையும் பெற்றுள்ளது.

இப்பள்ளி கடந்த வருடம் சிறந்த பள்ளிக்கான விருதைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி பெற்ற தருணத்தில் கும்பிடுமதுரை பள்ளி நிர்வாகம் கடந்த வருடம் கீழை நியூஸ் மற்றும் சத்தியப்பாதை தர்ம அறக்கட்டளை சார்பாக பள்ளிக்கு மாணவர்களுக்கான மேசை மற்றும் நாற்காலிகள் வழங்கியதை நினைவுகூர்ந்தமைக்கு கீழைநியூஸ் சார்பாக வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

புகைப்படத்தொகுப்பு