Home செய்திகள் காவல்துறை சேவை, உங்கள் வீட்டின் வாசலுக்கே,என்ற வாசகத்துடன் இராமநாதபுர மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு பிரச்சாரம்…

காவல்துறை சேவை, உங்கள் வீட்டின் வாசலுக்கே,என்ற வாசகத்துடன் இராமநாதபுர மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு பிரச்சாரம்…

by ஆசிரியர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு, அனைத்து உட்கோட்டங்களிலும் ‘Policing at your door steps’ என்ற தலைப்பில் கீழ்க்கண்ட விழிப்புணர்வு பிரச்சார முகாம்கள், இன்று முதல் ஒரு வார காலத்திற்குள் நடத்துவதற்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

1) சாலை பாதுகாப்பு (Road Safety) பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம்.

2) போதை வஸ்து மற்றும் புகையிலை (Drug & Tobacco) பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம்.

3) கந்துவட்டி (Kanduvatti) மற்றும் இது தொடர்பாக பொதுமக்களுக்கு இருக்கும் சட்ட பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம்.

4) பாலியல் ரீதியான கொடுமைகள் (Sexual Assault) பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம்.

5) கைது செய்யும்பொழுது குடிமக்களுக்கு இருக்கும் உரிமைகள் (Rights of citizens regarding arrest) பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம்.

6) பள்ளி/கல்லூரி மாணவர்களை காவல் நிலையங்களை பார்வையிடச் செய்து (Visit of College/School students at PS), காவல் நிலையங்களின் செயல்பாடுகள், பதிவேடுகள் மற்றும் ஆயுதங்கள் போன்றவை பற்றி தெரிவித்தல்.

இதன்படி, 07.11.2017-ம் தேதி இராமநாதபுரம் – ராஜா மேல்நிலைப்பள்ளி, கீழக்கரை – ஹைராத்துல் ஷலாலியா மேல்நிலைப்பள்ளி, பெருநாழி – நாடார் மேல்நிலைப்பள்ளி, கீழத்தூவல் – அலங்கானூர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மேற்படி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மேற்படி முகாம்களில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேழும், கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில், வருகிற 10.11.2017-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி முதல் 14.00 வரை இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!