அ(க)ழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கும் நகராட்சி வளாகத்தில் பயன்பாடில்லாமல் கிடக்கும் கழிப்பறைகள்..

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் அனைத்து பகுதிகளுக்கும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கும் வகையில் நவீன கழிப்பறைகள் அரசங்கத்தால் கொடுக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கீழக்கரை நகராட்சிக்கு வழங்கப்பட்ட நவீன கழிப்பறைகள் கீழக்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் எந்த பயன்பாடும் இல்லாமல் அழிய கூடிய நிலையில் கேட்பாரற்று கிடக்கிறது. அவ்வாறு கிடக்கும் கழிப்பறைகளை முறைபடுத்தி புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடற்கறை பூங்காவில் அமைத்தால் சுற்றுலா பயணிகளுக்கும், கடற்கரைக்கு வருபவர்களுக்கும் உபயோகமாக இருக்கும். நகராட்சி நிர்வாகம் மக்கள் நலன் கருதி துரித நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.