கீழக்ககரை தாசிம் பீவி கல்லூரியில் கணித்த்தமிழ் பேரவை பயிலரங்கம் நடைபெற்றது…

தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 01.11.2017 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் கணித்தமிழ் பேரவை பயிலரங்க தொடக்க விழா கல்லூரி கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. இறைவணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் வே. அகிலா தமிழ்த்துறைத் தலைவர் வரவேற்புரை வழங்கினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சுமையா அவர்கள் தலைமையுரையாற்றினார். முனைவர் பிரபாகரன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி அறிமுகவுரையாற்றினார். முனைவர் அ. செந்தில்ராஜன், இயக்குனர், கணினி மையம், அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி கலந்து கொண்டு கணினிப் பயன்பாடு பற்றியும் செயலி பதிவிறக்கம் செய்வது பற்றியும் சிறப்புரையாற்றினார். இரா. விசாலாட்சி, உதவிப்பேராசிரியை, தமிழ்த்துறை நன்றியுரை வழங்க இப்பயிலரங்கம் இனிதே நிறைவுற்றது.

இப்பயிலரங்கத்தில் முதலாமாண்டு மாணவிகள் பங்கேற்றார்கள். இப்பயிலரங்கத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.