Home செய்திகள் ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் 36 வது சர்வதேச புத்தக கண்காட்சி, தி.மு.க செயல்தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு..

ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் 36 வது சர்வதேச புத்தக கண்காட்சி, தி.மு.க செயல்தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு..

by ஆசிரியர்

ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் 36 வது சர்வதேச புத்தக கண்காட்சி கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடைபெற்று வரும் இக்கண்காட்சியில் உலகம் முழுவதுமிருந்து எழுத்தாளர்கள், பிரமுகர்கள், வாசகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் இந்தியாவை சேர்ந்த இலக்கிய பிரமுகர்கள், அரசியல் வாதிகள், எழுத்தாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் அரசு விருந்தினராக பங்கேற்று உரையாற்றும் போது, ஷார்ஜா நூலகத்திற்கு 1000 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்க உள்ளதாகவும், புத்தக கண்காட்சி போன்ற அறிவு சார்ந்த விஷயங்களை பயன்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,கடந்த திமுக ஆட்சியின் போது தமிழர்கள் நலன் கருதி “வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம்” அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும்,கழக ஆட்சி அமைந்த உடன் வாரியம் அமைக்கப்பட்டு அமீரகத்திற்கான ஒரு பிரதிநியும் நியமிக்கப்படுவார்  என்று அவர் உறுதி அளித்து உரையை நிறைவு செய்தார்.

கடந்த 36 ஆண்டுகளாக நடந்து வரும் சார்ஜாவின் புத்தக கண்காட்சி உலகின் மிகப்பெரிய கண்காட்சியாக கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுகவின் அமீரக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும், தமிழர்களும் கலந்து கொண்டனர். இது குறித்து ராமநாதபுர மாவட்டம் கீழக்கரை நகர் மீனவ அமைப்பு செயளாலளர் முகைதீன் அப்துல் காதர் (எ) தம்பி வாப்பா கூறுகையில், ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

TS 7 Lungies

You may also like

1 comment

சேக் முஹம்மது November 6, 2017 - 9:13 pm

அரங்கு நிறைந்த மக்கள்,அலைமோதிய கூட்டம் வெளியே. மக்களின் நம்பிக்கையை கூட்டம் பறைசாற்றியது.

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!