Home செய்திகள் கீழக்கரை நகராட்சியில் ஆட்சியர் தலைமையில் அதிரடியாக டெங்கு எதிரொலியால் சோதனை..

கீழக்கரை நகராட்சியில் ஆட்சியர் தலைமையில் அதிரடியாக டெங்கு எதிரொலியால் சோதனை..

by ஆசிரியர்

கீழக்கரை நகராட்சி எல்லையில் நேற்று(23-10-2017) ஆட்சியர் தலைமையில் நேற்று சுகாதார சோதனை காலை 08.00 மணி முதல் வியாபார ஸ்தலம் உட்பட பல இடங்களில் நடைபெற்றது.

இச்சோதனையின் போது கோட்டாட்சியர் ( R. T. O.), வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி ஊழியர்களுடன் நகர் முழுதும் ஆய்வு மேற்கொண்டனர். இச்சோதனையின் போது கொசு உற்பத்தியாகும் வகையிலும், சுகாதாரமற்ற இடங்களையும், நோய் பரப்பும் வகையில் பராமரிப்பின்றி கிடந்த இடங்கள், சுகாதாரமற்ற கடைகள் மற்றும் உணவு விற்கும் வியாபார நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதே போல் இன்றும் (24-10-2017) மீனாட்சிபுரம் பகுதியில் இருந்து நகரின் பல முக்கிய இடங்களில் சோதனகள் தொடரும் என்று அறியப்படுகிறது. இது குறித்து தெற்கு தெருவைச் சேர்ந்த அபுதாஹீர் கூறுகையில் “திடீரென கிளம்பி டெங்கு தடுப்பு என கூறி பொருட்களை அள்ளிச் செல்வதுடன் அபராதமும் விதிக்கின்றனர். நகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகளும், நகரில் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள்.

கீழக்கரைக்கு அதிகாரிகள் மாற்றலாகி வந்து பல வருடங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை அதற்கான நிரந்ததீர்வு காணப்படவில்லை, இன்னும் பல இடங்களில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. அதுவும் முக்கியமாய் வெள்ளிக் கிழமை அன்று குத்பா பள்ளி, தெற்கு தெரு பள்ளி போன்ற முக்கிய பகுதிகளில் கழிவு நீர் ஓடி சுகாதாரக் கேடு உண்டாகிறது.

இவ்வளவு காலம் பணியில் இருக்கும் அதிகாரிகள் எந்த தீர்வு காணாமல், இன்று டெங்கு என்ற காரத்தை கூறி, கலெக்டர் முன்னிலையில் வியாபாரிகள் மீது அபராதம் விதிப்பது எந்த வகையில் நியாயம்?? சாலையில் ஓடும் நல்ல தண்ணீர் கழீவு நீர்களால் ஏற்படும் தொற்று நோய்களுக்கு யார் மேல் அபராதம் விதிப்பது? அல்லது கவனமற்றது இருக்கும் நகராட்சி மீது யார் அபராதம் விதிப்பது?” என்றார். நியாயமான கேள்வி ஆனால் கேட்க வேண்டியவர்களின் காதுக்கு சென்றடையுமா??

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!