Home செய்திகள் பஹ்ரைனில் உதவியில்லாமல் தவித்த தமிழருக்கு உதவிகரம் நீட்டிய எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் பஹ்ரைன் இந்தியன் சோஷியல் ஃபோரம்…

பஹ்ரைனில் உதவியில்லாமல் தவித்த தமிழருக்கு உதவிகரம் நீட்டிய எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் பஹ்ரைன் இந்தியன் சோஷியல் ஃபோரம்…

by ஆசிரியர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலாய்குடியை சார்ந்தவர் கருப்பையா உடையார் என்பவர். இவர் சவுதி அரேபியாவில் இருந்து அல் டிராஃபி என்கிற நிறுவனம் மூலம் ஒரு வார கால விசா (on arrival visa) மூலம் வீட்டு வேலை செய்வதற்காக பக்ரைன் சென்றுள்ளார். ஆனால் சென்ற இடத்தில் அவரை வேலைக்கு அனுப்பிய  நிறுவனத்தின் கவனக்குறைவால் விசா காலவதியாகி மீண்டும் திரும்ப முடியாத நிலைக்கு ஆளானார். அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்தும் எந்த உதவியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் உணவுக்கு கூட வழியில்லாத நிலையில் பஹ்ரைன் இந்தியன் சோசியல் ஃபோரத்தின் உதவியை நாடியுள்ளார். அதே சமயம் அவரது உறவினர்களும் இந்தியாவில் எஸ்.டி.பி.ஐ கட்சியை நாடி கருப்பையாவை மீட்டுத்தருமாறு கேட்டுகொண்டனர்.

அதன் பிறகு அவருக்கு உணவு மற்றும் உறைவிடம் இந்தியன் சோசியல் ஃபோரம் மூலம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. மேலும் இந்திய தூதரகத்தின் மூலமாக பஹ்ரைன் அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி இவரது அபராத தொகையான 1,250 பஹ்ரைன் தீனாரை ( இந்திய மதிப்பு சுமார் ரூ இரண்டு லட்சம் ) தள்ளுபடி செய்து, சவுதி அரசாங்கத்தையும் வலியுறுத்தி நீண்ட போராட்டத்திற்கு பிறகு இன்று (19.10.17) காலை திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

இதற்காக ஏற்பாடுகளை பஹ்ரைன் இந்தியன் சோசியல் ஃபோரத்தின் மாநில தலைவர் அப்துல் கரீம், மாநில பொதுச்செயலாளர் அத்தாவுல்லா மற்றும் சோசியல் ஃபோரதின் உறுப்பினர் பரமக்குடி அசோக் நாதன் மற்றும் தமிழக எஸ்.டி.பி.ஜ நிர்வாகிகள் செய்திருந்தனர்.

திருச்சி வந்தடைந்த கருப்பையாவை, திருச்சி மாவட்ட செயலாளர் பொன்னகர் ரபிக், ஏர்போர்ட் கிளை தலைவர் காதர், பொருளாளர் காஜா ஆகியோர் நேரில் சென்று அவரை வரவேற்று, அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ஆறு வருடங்களுக்கு பிறகு தாயகம் திரும்ப உதவி செய்த, எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் பஹ்ரைன் சோசியல் ஃபோரம் நிர்வாகிகளுக்கு கருப்பையாவின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!