நிலவேம்பு கசாயம் பற்றிய தவறான தகவல்கள் பரப்பும் நபர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது.. அரசு அதிகாரிகள் எச்சரிக்கை..

தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் அதை தடுக்கும் விதமாக அரசு அதிகாரிகளும்,  சமூக ஆர்வலர்களும் தன்னலம் பாராமல் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகிப்பதும்,  அதைப் பற்றிய விழிப்புணர்வு பிரசுங்களையும் மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத சில நபர்களால் சமூக வலைதளங்களில் நிலவேம்பு கசாயம் அருந்துவதால் மலட்டுதன்மை மற்றும் ஆண்மைக் குறைவு ஏற்படும் என்ற வகையில் எந்த அடிப்படை ஆதாரமம் இல்லாமல் பரப்பப்பட்டு வருகிறது.  இதனால் பயன் பெறக்கூடிய மக்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.  மேலும் பொதுநலத்துடன் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள.

இது சம்பந்தமாக கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி கூறுகையில்.  “இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சி தலைவர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  மேலும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிந்தவர்கள்,  அதை பரப்பியவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.  இப்பிரச்சினை தொடரும் பட்சத்தில் கடும் நடுவடிக்கை எடுக்கவும் அரசு தயங்காது. மேலும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில் இருந்து பல ஆய்வுகளுக்கு பிறகே கொள்முதல் செய்யப்பட்டு, அதன் பின்பே இந்த கசாயம் வழங்கப்படுகிறது, ஆகையால் இது போன்ற மக்களை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய செய்திகளை பரப்புவதில் இருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் “என்றார்.

1 Comment

 1. தற்போது நிலவேம்பு கசாயம் குடிக்காதீங்க இதனால் பலகீனம் ஏற்படும்.
  என்று தென்றல் என்ற பெயரில் பல வாட்ஸ் அப் தளங்களில் பரவலாக ஆடியோ செய்தியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாக பரவி வருகின்றது…

  நம் முன்னால் எழும் கேள்வி இது தான்.

  நிலவேம்பு என்பது மூலிகை வகையை சேர்ந்தது ஆகும்.அந்த ஆடியோ பதிவு படி நாம் இந்த கசாயத்தை தொடர்ந்து மாதக்கணக்கில் குடிப்பது கிடையாது.ஒரு நாள் அல்லது தொடர்ந்துமூன்று நாள் 50 மில்லிக்கும் குறைவாகவே அருந்துகின்றோம்.நிலவேம்பு என்பது அதிக கசப்பு நிறைந்த ராஜ மூலிகை ஆகும்.அதோ ஆடியோவில் இன்னும் பல மூலிகைகள் சேர்த்து அதாவது பற்படம் போன்ற மூலிகைகள் சேர்த்து குடிக்கலாம் என்று இரண்டு கருத்துக்களை ஆடியோவில் பேசுபவர் தெரிவிக்கின்றார்.இதில் இருந்து கண்டிப்பாக நிலவேம்பு கசாயம் குடிக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்ட கருத்தை தெரிக்கின்றார்.

  அமெரிக்க போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு வேம்பு மற்றும் பல மூலிகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு பல மருந்துகள் தயாரிக்கப்படுகின்றது.

  அந்த ஆடியோ பதிவு படி கீழ்தட்டில் சாக்கடை அருகில் வாழும் மனிதர்கள் யாரும் நோய் இல்லாமல் இருப்பது இல்லை.மேல் தட்டில் மாடிகளில் வாழும் மனிதர்கள் யாரும் நோயோடு இருப்பது இல்லை.இந்த காரணங்களை இந்த ஆடியோ பதிவின் ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

  இந்த நிலவேம்பு கசாயத்தை குடிப்பதால் அதில் இருக்கும் கசப்பு தன்மை டெங்கு காய்ச்சல் மற்றும் இல்லை பல நோய்கள் வராமல் தடுக்கலாம்.இந்த ஆடியோவில் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் குடிக்க கூடாது என்பதை அறிவியல் பூர்வமாக,ஆதாரப்பூர்வமாக நிருபிக்கும் எந்த பதிவும் இல்லை.

  நிலவேம்பு என்பது ராஜ வகையை சேர்ந்த ஒரு மூலிகை என்ற கருத்தோடு பார்ப்பதும் இது நம்மை பலகீனமாக்க தொடர்ந்து அருந்தும் பானம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

  இறைவன் கூறுகின்றான். ஒவ்வொரு நோய்களுக்கு இந்த உலகத்தில்(சிபா)மருந்து இருக்கின்றது மரணத்தை தவிர என்கின்றான்.இந்த அடிப்படையில் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் மருந்தாக கூட இருக்கலாம்.

  எனவே!எந்த விஷயத்திலும் ஆதாரப்பூர்வமான தகவலுக்கு மற்றும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

  இப்படிக்கு

  முகைதீன் இப்ராகீம்
  செயலாளர்
  மக்கள் நல பாதுகாப்புக் கழகம்
  கீழக்கரை

Comments are closed.