கல்வித்தந்தை பி.எஸ் அப்துர்ரஹ்மான் 90வது பிறந்த நாள் விழா..

தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கல்வித்தந்தை பி.எஸ் அப்துர் ரஹ்மான் அவர்களின் 90 வது பிறந்த நாள் விழா இன்று காலை 11.00 மணியளவில் இறை வணக்கத்துடன் தொடங்கியது. கல்லூரி முதல்வர் முனைவர் சுமையா வரவேற்புரை வழங்கினார். சீதக்காதி அறக்கட்டளை பொது மேலாளர் ஜலால், பி எஸ் அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம் சென்னை, இஸ்லாமியக் கல்லவித் துறை தலைவர் செய்யது ஸ்ஊத் ஜமாலி, சாதிக் அலி, தலைமை மேலாளர் சுல்தான் மற்றும் சிக்கந்தர் ஜமிலா டிரஸ்ட் கீழக்கரை, கல்லூரி செயலாளர் காலித் ஏ.கே புஹாரி ஆகியோர்கள் கலந்துகொண்டு கல்வித் தந்தையின் கல்விப்பணி பற்றியும் சமுதாயப்பணி பற்றியும் கல்வித்தந்தை கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் என்றும் பாராட்டி பேசினர்.

டாக்டர் சுல்தான் அஹமது இஸ்மாயில், மண் உயிரியலாளர் மற்றும் சூழலியல் வல்லுநர் இயக்குநர் சுற்றுச்சூழல் அறிவியல் ஆராய்ச்சிக்கூடம், சென்னை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தை வளர்ப்பு பற்றியும், மாணவிகள் எவ்வாறு திறமைகளை மற்றும் தன்னம்பிக்கையை கொள்வது பற்றியும்ன் வளர்ப்பது பற்றியும் உரையாற்றினார். கல்வித் தந்தையின் பிறந்த தினத்தை முன்னிட்டு கல்விப்பணியில் பி.எஸ்.ஏ மற்றும் அறப்பணியில் பி.எஸ்.ஏ ஆகிய தலைப்புகளில் நடத்தப்பட்ட கட்டுரை பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 3000.00, இரண்டாம் பரிசாக ரூபாய் 2000.00 வழங்கப்பட்டது. சீதக்காதி தொண்டு நிறுவனம் அறங்காவலர் யூசுப் சுலைஹா அறக்கட்டளை, சென்னை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட இஸ்லாமியப் பெண்கள் சங்கம் செயலாளர் குர்ரத் ஜமிலா இவ்விழாவில் கலந்து கொண்டார். ஜுமானா பேகம், இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி நன்றியுரை வழங்க இனிதே விழா நிறைவுற்றது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சீதக்காதி துணைப்பொது மேலாளர் சேக் தாவூத்கான் அவர்களும், மாணவப்பேரவை ஆலோசகர்களான நசீமா பர்வீன், தலைவர் அரபித்துறை, கன்சுல் மகரிபா உதவிப்பேராசிரியை ஆங்கிலத்துறை அவர்களும் செய்திருந்தார்கள்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..