தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச் சாரல் விழா நடைபெற்றது..

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கல்வித்தந்தை பி.எஸ். அப்துர் ரஹ்மான் 90 வது பிறந்த நாள் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 86வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்த்துறை சார்பாக மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையேயான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுடன் இலக்கியச்சாரல் விழா 13.10.2017 அன்று காலை 11.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இறை வணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் சுமையா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி செயலாளர் காலித் ஏ.கே. புஹாரி முன்னிலை வகித்தார். கல்லூரி தாளாளர் மருத்துவர் ரஹ்மத்துன்னிசா அப்துர் ரஹ்மான் மற்றும் அஹமது புஹாரி அறங்காவலர் சீதக்காதி அறக்கட்டளை ஆட்சிக்குழு உறுப்பினர்தலைமையுரை வழங்கினார்கள். அதைத் தொடர்ந்து குர்ரத் ஜமிலா, புரவலர் சீதக்காதி தொண்டு நிறுவனம் அறங்காவலர் யூசுப் சுலைஹா அறக்கட்டளை சென்னை மற்றும் செயலாளர் ராமநாதபுரம் மாவட்ட இஸ்லாமியப் பெண்கள் சங்கம் அவர்கள் விழா உரையாற்றினார். இவ்விழாவில் முன்னாள் நகர் மன்றத் தலைவர் ராவியத்துல் கதரியா அவர்கள் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினராக என்.எம் முருகேசன் தலைவர் ஆசிரியர் நலச்சங்கம் இராமநாதபுரம் கலந்து கொண்டு கல்வித்தந்தை அவர்களின் தொண்டுகள் பற்றியும் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் விஞ்ஞானம் பற்றிய கருத்துக்களையும் மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

இவ்விழாவில் மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 5000மும் இரண்டாம் பரிசாக ரூபாய் 3000மும் மூன்றாம் பரிசாக ரூபாய் 2000மும் வழங்கப்பட்டது. ஆறுதல் பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டது. பல்வேறு கல்லூரிகளிலிருந்தும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக அகிலா தமிழ்த்துறைத் தலைவர் அவர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் செய்திருந்தார்கள்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..